செவ்வாய்க்கிழமை 13 நவம்பர் 2018

சாத்தான்குளம் விவசாயிகள் மதுரைக்கு கல்வி சுற்றுலா

DIN | Published: 12th September 2018 09:23 AM

சாத்தான்குளம்  வட்டார விவசாயிகள்  மதுரை வேளாண்மை கல்லூரிக்கு கல்வி சுற்றுலா சென்று திரும்பினர்.
  இந்த சுற்றுலாவில் சாத்தான்குளம் வட்டாரத்தில் இருந்து 50 விவசாயிகள் தேர்வு செய்யப்பட்டு மதுரை வேளாண்மை கல்லூரிக்கு அழைத்துச் செல்லப்பட்டனர் . அங்கு பண்ணைப் பராமரிப்பு துறையைச் சார்ந்த உதவிப் பேராசிரியர் செந்தில், 
நீர் சேகரிப்பு,  குறைந்த நீரில் மேலாண்மை மற்றும் பயிர்களின் தண்ணீர் தேவை ஆகியவை குறித்து விளக்கமளித்தார்.  பின்னர் விவசாயிகளுக்கு கால்நடை வளர்புபு மற்றும் பராமரிப்பு முறைகள் குறித்து  விளக்கம் அளிக்கப்பட்டது. 
 பின்னர் மதுரை தமுக்கம் மைதானத்தில் நடைபெற்ற அக்ரி எக்ஸ்போ 2018 என்ற விவசாயிகள் கண்காட்சிக்கு விவசாயிகள் அழைத்துச் செல்லப்பட்டனர். அங்கு விவசாய இயந்திரங்கள் , பண்ணைக் கருவிகள், சொட்டு நீர் தெளிப்பு நீர் பாசன முறைகள் மற்றும் உதிரி பாகங்கள், விதை, உரம், பூச்சி மருந்துகள், கால்நடை தீவனங்கள், பூச்சி மருந்து தெளிப்பான் வகைகள் மற்றும் சோலார் மோட்டார் ஆகியவற்றை விவசாயிகள் பார்வையிட்டனர். ஏற்பாடுகளை வட்டார தொழில்நுட்ப மேலாளர் ஜெபக்குமார், உதவி தொழில்நுட்ப மேலாளர் முருகன் ஆகியோர் செய்திருந்தனர்.
 

More from the section

கோவில்பட்டி அரசு தலைமை மருத்துவமனையில் தேசிய தர மதிப்பீட்டுக் குழுவினர் ஆய்வு
கிராம நிர்வாக அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்
கோவில்பட்டி ரயில் நிலையத்தில் இளைஞரை தாக்கி பணம் பறிப்பு
கோவில்பட்டி ரயில் நிலையத்தில் இளைஞரை தாக்கி பணம் பறிப்பு
விவசாயிகளுக்கு பயிர்க் காப்பீட்டுத் தொகையை வழங்கக் கோரி கோட்டாட்சியர் அலுவலகம் முற்றுகை