வெள்ளிக்கிழமை 16 நவம்பர் 2018

தூத்துக்குடியில் எழுத்தறிவு தின விழிப்புணர்வுப் பேரணி

DIN | Published: 12th September 2018 09:22 AM

தூத்துக்குடியில் எழுத்தறிவு தின விழிப்புணர்வுப் பேரணி  நடைபெற்றது.
தூத்துக்குடி காமராஜ் கல்லூரியின் சுயநிதிப் பிரிவு  நாட்டு நலப்பணித் திட்டம் சார்பில்,  உலக எழுத்தறிவு தினத்தையொட்டி  நடைபெற்ற இப்  பேரணியை,  கல்லூரி முதல்வர் து. நாகராஜன் கொடியசைத்து தொடங்கிவைத்தார்.
சுயநிதிப் பாடப்பிரிவு இயக்குநர் டோனி மெல்வின் முன்னிலை வகித்தார்.
கல்லூரியில் இருந்து தொடங்கி இந்த பேரணி திருச்செந்தூர் சாலை வழியாக சென்று மீண்டும் கல்லூரியில் நிறைவடைந்தது.   இதில்,  நாட்டு நலப் பணித் திட்ட அலுவலர்கள் ஜோசப்பின் ஜெரினா,  கோபாலகிருஷ்ணன்,  செல்வராஜபுஷ்பா, மணிகண்டன் மற்றும் மாணவர், மாணவிகள் கலந்துகொண்டனர்.

More from the section

மக்காசோளத்துக்கு இழப்பீட்டு தொகை வழங்கக் கோரி 
2 ஆவது நாளாக காத்திருப்பு போராட்டம்

மின்வாரிய ஒப்பந்த  தொழிலாளர்கள் போராட்டம்
விபத்தில் காயமடைந்த தொழிலாளி சாவு
கிணற்றில் தவறி விழுந்து தொழிலாளி சாவு
போலீஸ் வாகனம் கவிழ்ந்து 5 பேர் காயம்