சாகுபுரம் கமலாவதி  பள்ளியில் அடல் டிங்கரிங் ஆய்வகம்  திறப்பு

சாகுபுரம் கமலாவதி மேல்நிலைப் பள்ளியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள அடல் டிங்கரிங் ஆய்வகம்  திறப்பு விழா நடைபெற்றது. 

சாகுபுரம் கமலாவதி மேல்நிலைப் பள்ளியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள அடல் டிங்கரிங் ஆய்வகம்  திறப்பு விழா நடைபெற்றது. 
கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு முன்னாள் பிரதமர் அடல்பிகாரி வாஜ்பாய் பெயரில் மத்திய அரசு நிதி உதவியுடன் அடல் டிங்கரிங்க் லேப் என்ற பெயரில் மாணவர்களுக்கான சோதனைக் கூடம் அமைக்கும் திட்டத்தை மத்திய அரசு அறிமுகப்படுத்தியது. இதன் மூலம் மத்திய அரசு தேர்வு செய்யும் பள்ளிகளுக்கு கணிதம் மற்றும் அறிவியல் ஆய்வகத்துக்குத் தேவையான கருவிகள் வழங்குகின்றனர்.  தற்போது இந்தியா முழுவதும் இத்திட்டத்தை பல பள்ளிகள் செயல்படுத்தத் தொடங்கி உள்ளன. 
இத்திட்டத்தில், சாகுபுரம் கமலாவதி மேல்நிலைப் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள ஆய்வகத்  திறப்பு விழாவுக்கு,  பள்ளி முதல்வர் ஆர்.சண்முகானந்தன் தலைமை வகித்தார். 
மாணவர்களின் மனநல ஆலோசகர் ஆர்.கணேஷ்,  துணை முதல்வர் வனிதா வி.ராயன்,  தலைமை ஆசிரியர் (பொறுப்பு) இ.ஸ்டீபன் பாலாசிர்,  வி.மதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.  
மதுரை செயின்ட் மைக்கேல் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி முதல்வர் கே.மதிவதனன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு ஆய்வகத்தை திறந்து வைத்துப் பேசினார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com