புரட்டாசி முதல் சனிக்கிழமை பெருமாள் கோயில்களில் சிறப்பு பூஜை

புரட்டாசி முதல் சனிக்கிழமையையொட்டி, கோவில்பட்டி மற்றும் இலுப்பையூரணியில் உள்ள பெருமாள் கோயில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.


புரட்டாசி முதல் சனிக்கிழமையையொட்டி, கோவில்பட்டி மற்றும் இலுப்பையூரணியில் உள்ள பெருமாள் கோயில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
இதை முன்னிட்டு, கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் உடனுறை பூவனநாத சுவாமி கோயிலுடன் இணைந்த சுந்தரராஜ பெருமாள் கோயிலில், கோயில் நடை அதிகாலை 4.30 மணிக்கு திறக்கப்பட்டது.
தொடர்ந்து, திருவனந்தல் மற்றும் திருப்பள்ளி எழுச்சி பூஜைகள் நடைபெற்றன. பின்னர், சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடைபெற்றது. இரவு 8 மணிக்கு கருட வாகனத்தில் சுவாமி புறப்பாடு நடைபெற்றது.
விழாவில், மண்டகப்படிதாரர்கள் லட்சுமி சீனிவாசா பள்ளி நிர்வாகி கோவிந்தராஜ், கோயில் நிர்வாக அலுவலர் பாலசுப்பிரமணியராஜன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
வடக்கு இலுப்பையூரணியில் உள்ள ஸ்ரீ அலமேலு மங்கா சமேத ஸ்ரீ வெங்கடாசலபதி கோயிலில் கோயில் நடை அதிகாலை 4.30 மணிக்கு திறக்கப்பட்டது.
தொடர்ந்து 5 மணிக்கு திருமஞ்சனம், 7 மணிக்கு தீபாராதனை நடைபெற்றன. மாலை 6 மணிக்கு சகஸ்ரநாமம் நடைபெற்றது. இரவு 8 மணிக்கு கருடசேவை நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com