சிவில் சர்வீஸ் தேர்வு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவில்பட்டி கோ.வெங்கடசுவாமி நாயுடு சுயநிதிப் பாடப்பிரிவு கல்லூரியில், சிவில் சர்வீஸ் தேர்வு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி சனிக்கிழமை


கோவில்பட்டி கோ.வெங்கடசுவாமி நாயுடு சுயநிதிப் பாடப்பிரிவு கல்லூரியில், சிவில் சர்வீஸ் தேர்வு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது. 
ஜே.சி.ஐ. சார்பில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் கிருஷ்ணசாமி தலைமை வகித்தார். சுயநிதிப் பாடப்பிரிவு கல்லூரி இயக்குநர் வெங்கடாசலபதி முன்னிலை வகித்தார். 
தமிழக காவல் துறை கூடுதல் இயக்குநர் (ரயில்வே)  சைலேந்திரபாபு சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு பேசியது: மாணவர், மாணவிகள் தமிழ் மற்றும் ஆங்கில நாளிதழ்களைப் படிப்பதற்கு தினந்தோறும் ஒரு மணி நேரம் ஒதுக்க வேண்டும். படிப்பில் ஆழ்ந்த கவனம் செலுத்துவதற்கு உடற்பயிற்சியில் ஈடுபடுவதும் அவசியம். பல்வேறு கலை போட்டிகளில் பங்கேற்க வேண்டும். படிக்கும் போதே ஒவ்வொரு துறையைப் பற்றியும் தெரிந்திருக்க வேண்டும். குறிக்கோளை அடிப்படையாகக் கொண்டு செயலில் இறங்கினால் வெற்றியடையலாம் என்றார் அவர். தொடர்ந்து, மாணவர், மாணவிகளின் கேள்விகளுக்கு அவர் பதிலளித்தார்.  
நிகழ்ச்சியில், கோ.வெங்கடசுவாமி நாயுடு கல்லூரி, எஸ்.எஸ்.துரைசாமி நாடார் மாரியம்மாள் கல்லூரி மாணவர், மாணவிகள், ஜே.சி.ஐ.  முன்னாள் தலைவர் பார்த்தீபன், எஸ்.எஸ்.துரைசாமி நாடார் மாரியம்மாள் கல்லூரி முதல்வர் சிவசுப்பிரமணியன், செயலர் கண்ணன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். ஜே.சி.ஐ. தலைவர் லட்சுமி விக்னேஷ் வரவேற்றார். செயலர் வெங்கடேஷ் நன்றி கூறினார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com