தூத்துக்குடி தொகுதி: 2ஆவது நாளிலும் மனு தாக்கல் இல்லை

மக்களவைத் தேர்தலுக்கான வேட்பு மனுத் தாக்கல் செவ்வாய்க்கிழமை தொடங்கிய நிலையில், புதன்கிழமையும் யாரும் மனு தாக்கல் செய்யவில்லை.

மக்களவைத் தேர்தலுக்கான வேட்பு மனுத் தாக்கல் செவ்வாய்க்கிழமை தொடங்கிய நிலையில், புதன்கிழமையும் யாரும் மனு தாக்கல் செய்யவில்லை.
தமிழகத்தில் மக்களவைத் தொகுதிகள், 18 பேரவைத் தொகுதிகளுக்கான தேர்தல் ஏப்ரல் 18இல் நடைபெற உள்ள நிலையில்,  போட்டியிட விரும்புவோர் தங்களது வேட்பு மனுவை செவ்வாய்க்கிழமை முதல் தாக்கல் செய்யலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது.
தூத்துக்குடி மக்களவைத் தொகுதிக்கு மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரான ஆட்சியர் சந்தீப் நந்தூரி, முதன்மை உதவி தேர்தல் அலுவலரான சுகுமார் ஆகியோரிடம் மனு தாக்கல் செய்யலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதையொட்டி, ஆட்சியர் அலுவலகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
முதல் நாளான செவ்வாய்க்கிழமை யாரும் மனு தாக்கல் செய்யவில்லை. 
இந்நிலையில், 2ஆவது நாளான புதன்கிழமை பிற்பகல் 3 மணி வரை யாரும் மனு தாக்கல் செய்யவில்லை. 
எனினும், கட்சிகள் சார்பிலும், சுயேச்சையாகவும் போட்டியிட விரும்புவோர் என 26 பேர் மாவட்ட தேர்தல் பிரிவு அலுவலகத்திலிருந்து மனுக்களைப் பெற்றுச் சென்றுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com