சாத்தான்குளம் தச்சமொழி ஸ்ரீமுத்துமாரியம்மன் கோயிலில் பெளணர்மியை முன்னிட்டு சிறப்பு பூஜை வழிபாடு புதன்கிழமை நடைபெற்றது.
இதையொட்டி, ஸ்ரீமுத்துமாரியம்மன், ஸ்ரீமுத்தாரம்மன், ஸ்ரீமாரியம்மன் உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு பூஜை, சிறப்பு அலங்கார தீபாராதனை, அபிஷேகம் உள்ளிட்டவை நடைபெற்றன. இதையடுத்து ஸ்ரீமுத்தாரம்மன் சிறப்பு அலங்காரத்தில் ஊஞ்சலில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பெண்கள் பக்தி பாடல்கள் பாடி அம்பாளை தரிசனம் செய்தனர்.