தூத்துக்குடி

தூத்துக்குடியில் கனிமொழியுடன் கே.எஸ்.ராதாகிருஷ்ணன் சந்திப்பு

DIN

தூத்துக்குடி மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளர் கனிமொழியை அக்கட்சியின் மாநில செய்தித் தொடர்பாளர் வழக்குரைஞர் கே.எஸ். ராதாகிருஷ்ணன் மற்றும் நிர்வாகிகள் வியாழக்கிழமை சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.
தூத்துக்குடி மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் கனிமொழி, தனது பிரசாரத்தை வெள்ளிக்கிழமை (மார்ச் 22) திருச்செந்தூரில் தொடங்குகிறார். இதனிடையே, திமுக மாநில செய்தித் தொடர்பாளர் கே.எஸ். ராதாகிருஷ்ணன், நிர்வாகிகள் கனிமொழியை தூத்துக்குடியில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர். அப்போது, தூத்துக்குடி வடக்கு மாவட்டப் பொறுப்பாளர் கீதாஜீவன் எம்.எல்.ஏ., முன்னாள் ஒன்றியச் செயலரான மொழிப்போர் தியாகி பா. முத்து, பொதுக்குழு உறுப்பினர் பா.மு. பாண்டியன், மாவட்ட வர்த்தக அணிச் செயலர் ராஜகுரு உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
இந்த சந்திப்பின்போது, கோவில்பட்டி, விளாத்திகுளம், ஓட்டப்பிடாரம் பேரவைத் தொகுதிகளில் மாநில செய்தித் தொடர்பாளர் தலைமையில் தேர்தல் பணியை தொடங்குவதாக நிர்வாகிகள் கனிமொழியிடம் உறுதி அளித்தனர். கே.எஸ். ராதாகிருஷ்ணன் கூறியது: வானம் பார்த்த பூமியான கோவில்பட்டி, விளாத்திகுளம், ஓட்டப்பிடாரம் பகுதிகள் கடந்த காலங்களில் புறக்கணிக்கப்பட்டதால் விவசாயம் செழிக்கவும், தொழில் வளர்ச்சிக்கும் முயற்சி எடுப்பதாக கனிமொழி உறுதியளித்தார். திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் சிறந்த ஆளுமையை தூத்துக்குடி மக்களவைத் தொகுதிக்கு வழங்கி உள்ளார். கனிமொழி பல லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பெங்களூரு குண்டுவெடிப்பு: முக்கிய குற்றவாளி கைது!

பும்ராவை சரியாக பயன்படுத்தவில்லை; ஸ்டீவ் ஸ்மித் கருத்து!

மும்பை விழாவில் அழகு பதுமைகள் அணிவகுப்பு - புகைப்படங்கள்

‘மற்றவர்களுக்கு தொல்லை தருவது காங்கிரஸின் கலாச்சாரம்’: மோடி காட்டம்!

தில்லி பந்துவீச்சு; 100-வது போட்டியில் ரிஷப் பந்த்!

SCROLL FOR NEXT