தூத்துக்குடி

சமூக நீதிக்கு எதிராக செயல்படுகிறது தமிழக அரசு: கனிமொழி பேச்சு

DIN

மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா கட்சியின் கட்டுப்பாட்டுக்கு இணங்க, சமூக நீதிக்கு எதிராக தமிழக அரசு செயல்பட்டு வருகிறது என்றார் தூத்துக்குடி மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளர் கனிமொழி.
திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகளின் தூத்துக்குடி பேரவைத் தொகுதிக்குள்பட்ட செயல்வீரர்கள் கூட்டம், தூத்துக்குடியில் சனிக்கிழமை நடைபெற்றது. இதில் கனிமொழி பேசியது:
தற்போது நடைபெற இருக்கும் தேர்தல், அனைவருக்கும் மிகவும் முக்கியமான தேர்தல். பாஜக ஆட்சி வீழ்த்தப்படாவிட்டால் கருத்துரிமை இல்லாமல் போய்விடும். நாட்டில் கருத்து சுதந்திரம் இல்லை என்றால் கனிமொழி எப்படி பேசுகிறார் என பாஜக வேட்பாளர் தமிழிசை கேள்வி கேட்டுள்ளார். கனிமொழி பேசுவதற்கு பாஜகவில் யார் அதிகாரம் கொடுக்க வேண்டும்?. என்னுடைய கருத்து சுதந்திரம் பெரியாரால், அண்ணாவால், கருணாநிதியால் உருவாக்கப்பட்ட திமுகவால் கொடுக்கப்பட்டது. பாஜகவுக்கு எதிராக கருத்து சொல்பவர்கள் மீது வழக்கு போடுகிறார்கள். மாணவி சோபியாவின் கருத்து சுதந்திரம் எந்த அளவுக்கு பறிக்கப்பட்டது என்பது குறித்து தமிழிசை பதில் கூற வேண்டும்.
மத்திய அரசின் கட்டுப்பாட்டுக்குள் இருந்து கொண்டு தமிழகத்தில் ஆட்சி செய்யும் அதிமுக  நீட் தேர்வு,  மீத்தேன், ஹைட்ரோ கார்பன் போன்ற திட்டங்களை மக்கள் மீது திணிக்கிறது. சமூக நீதிக்கு எதிராக தமிழக அரசு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. அதிமுக ஆட்சியில் குடிநீர், சாலை வசதிகள் சரியாக இல்லை. தொழில் துறை முன்னேறவில்லை.
மத்தியில் காங்கிரஸ் தலைமையில் ஆட்சி அமைத்தவுடன் ஜிஎஸ்டி வரியினால்  ஏற்பட்ட குழப்பங்கள் சரிசெய்யப்படும். தூத்துக்குடி துறைமுகம் விரிவுபடுத்தபட்டு பல வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும். விமான நிலையத்தை பன்னாட்டு முனையமாக்க தகுந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மத்தியில் காங்கிரஸ் தலைமையிலான ஆட்சியும், தமிழகத்தில் திமுக ஆட்சியும் அமைத்தவுடன் நிச்சயமாக பிரச்னைகள் அனைத்தும் சரிசெய்யப்படும் என்றார் அவர்.
கூட்டத்தில், தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் கீதா ஜீவன் எம்எல்ஏ, காங்கிரஸ் கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினர் ஏபிசிவீ சண்முகம், மாநகர் மாவட்டத் தலைவர் சி. எஸ். முரளிதரன், மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலர் அர்ஜுனன், இந்திய கம்யூனிஸ்ட் மாவட்டச் செயலர் அழகுமுத்து பாண்டியன், மதிமுக மாவட்டச் செயலர் ஆர்.எஸ். ரமேஷ், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மத்திய மாவட்டச் செயலர் அகமது இக்பால் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
முன்னதாக, திரேஸ்புரம் கடற்கரை பகுதிக்குச் சென்ற கனிமொழி, மீனவ சங்கப் பிரதிநிதிகளை சந்தித்து வாக்கு சேகரித்தார். மீனவர்களுக்கு தனி வங்கி, டீசல் மானியம் உள்ளிட்ட கோரிக்கைகளை விரைந்து நிறைவேற்ற நடவடிக்கை எடுப்பேன் என அவர் உறுதி அளித்தார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இரட்டை ரயில் பாதை பணி: நாகா்கோவில் செல்லும் ரயில்கள் ரத்து!

உஜ்ஜைனி காளியம்மன் கோயிலில் இன்று அக்னி கப்பரை வழிபாடு

நாலாட்டின்புதூரில் ரூ. 80 ஆயிரம் பறிமுதல்

சமூக நீதிக்கான குரல் நாடாளுமன்றத்தில் ஒலிக்க வேண்டும் -தொல். திருமாவளவன்

தொடா் விடுமுறை: ஆம்னி பேருந்துகளின் கட்டணம் உயா்வு! மதுரைக்கு ரூ.3,000, நாகா்கோவிலுக்கு ரூ.4,000

SCROLL FOR NEXT