தேர்தலில் வாக்களிப்பது குறித்து காதுகேளாதோருக்கு பயிற்சி

மக்களவைத் தேர்தலின்போது காதுகேளாதோர் எப்படி வாக்களிக்க வேண்டும் என்பது குறித்து தூத்துக்குடியில் சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டது.


மக்களவைத் தேர்தலின்போது காதுகேளாதோர் எப்படி வாக்களிக்க வேண்டும் என்பது குறித்து தூத்துக்குடியில் சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டது.
தூத்துக்குடி மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நலத்துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் சார்பில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியை, மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தொடங்கிவைத்தார்.
காதுகேளாதோர் வாக்களிக்க வாக்குச்சாவடிகளில் மேற்கொள்ளப்பட உள்ள சிறப்பு வசதிகள்,  பார்வையற்றோருக்காக வாக்குச்சாவடியில் வைக்கப்பட உள்ள பிரெய்லி போஸ்டர்கள் குறித்து மாவட்ட ஆட்சியர் விளக்கம் அளித்தார்.
விழிப்புணர்வு ரங்கோலி: தூத்துக்குடி மாவட்ட சுகாதாரத் துறை சார்பில், தூத்துக்குடி தருவை மைதானத்தில் சனிக்கிழமை நடைபெற்ற வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சியில், ரங்கோலி கோலங்களை ஆட்சியர் சந்தீப் நந்தூரி பார்வையிட்டார்.
இதேபோல், தூத்துக்குடி புனித திருஇருதய செவிலியர் பயிற்சி கல்லூரியில் நடைபெற்ற தேர்தல் விழிப்புணர்வு நிகழ்ச்சியில், ஆட்சியர் கலந்துகொண்டு வாக்காளர் விழிப்புணர்வு கலைநிகழ்ச்சிகளை பார்வையிட்டார். 
மேலும், வாக்கு ஒப்புகைச் சீட்டு இயந்திரம் குறித்து மாணவிகளுக்கு ஆட்சியர் விளக்கம் அளித்தார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com