குமரி தொகுதியில் பிரியங்கா பிரசாரம்: ஹெச். வசந்தகுமார் தகவல்

கன்னியாகுமரியில் பிரசாரம் மேற்கொள்ள பிரியங்கா, திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் உள்ளிட்டோர் வருகை தர உள்ளனர் 

கன்னியாகுமரியில் பிரசாரம் மேற்கொள்ள பிரியங்கா, திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் உள்ளிட்டோர் வருகை தர உள்ளனர் என்று காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ஹெச். வசந்தகுமார் தெரிவித்தார்.
கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ஹெச். வசந்தகுமார் ஞாயிற்றுக்கிழமை தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் அவர் கூறியது: கன்னியாகுமரி தொகுதியில் ரூ. 40 ஆயிரம் கோடியில் வளர்ச்சித் திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளதாக பாஜக வேட்பாளரான மத்திய இணைஅமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
என்னென்ன திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன என்பதை அவரால் தெரிவிக்க முடியுமா?.  2 பாலங்கள் கட்டியதை தவிர வேறு எந்த திட்டங்களும் செயல்படுத்தியதாக தெரியவில்லை. 2014 தேர்தலில் ஏழை இந்து மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை பெற்றுத் தருவதாக தெரிவித்த அவர், இப்போது வரை அந்த கோரிக்கையை நிறைவேற்றவில்லை.  பொய் வாக்குறுதிகளை கூறி 2014 இல் பொன். ராதாகிருஷ்ணன் வெற்றிபெற்றார். இந்த தேர்தலில் கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியில் நிச்சயமாக நான் வெற்றி பெறுவேன். 
தேர்தல் பிரசாரத்துக்காக பிரியங்கா, திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், நடிகர் உதயநிதி ஸ்டாலின், நடிகை குஷ்பு உள்ளிட்டோர் வருகின்றனர் என்றார் அவர்.
முன்னதாக, தூத்துக்குடிக்கு விமானத்தில் வந்த வசந்தகுமாருக்கு தூத்துக்குடி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கட்சியின் தலைவர் சி.எஸ். முரளிதரன் தலைமையில் அக்கட்சியினர் வரவேற்பு அளித்து வாழ்த்து தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com