அரியலூர் அரசு மருத்துவமனையில் கூடுதல் மருத்துவரை நியமிக்கக் கோரிக்கை

அரியலூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் இரவு நேரத்தில் கூடுதல் மருத்துவரை நியமிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் மு.விஜயலட்சுமியிடம்,


அரியலூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் இரவு நேரத்தில் கூடுதல் மருத்துவரை நியமிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் மு.விஜயலட்சுமியிடம், அரியலூர் நகர இளைஞர் அமைப்பினர் கோரிக்கை மனு அளித்தனர்.
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைகேட்புக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு ஆட்சியர் மு. விஜயலட்சுமி தலைமை வகித்து, பொதுமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் அளித்த 336 கோரிக்கை மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். கூட்டத்தில்,
மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் சார்பில் 11 பயனாளிகளுக்கு தலா ரூ.5,250 வீதம் ரூ.57 ஆயிரத்து 750 மதிப்பில் இலவச தையல் இயந்திரங்களை வழங்கினார்.மேலும், அரியலூர் நகர இளைஞர் அளித்த மனுவில் அரியலூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் இரவு நேரத்தில் ஒரு மருத்துவர், ஒரு செவிலியர் மட்டுமே பணியில் உள்ளனர். இதில் செவிலியர் உள்நோயாளிகளை கவனிப்பது, மாத்திரை வழங்குவது, ஊசி போடுவது உள்ளிட்ட பணிகளை செய்து வருகிறார். இதேபோல் மருத்துவர் இரவு நேரத்தில் வரும் அனைத்து நோயாளிகளையும் அவரால் கவனிக்க முடியவில்லை. எனவே மாவட்ட தலைமை மருத்தவமனையாக உள்ள இந்த மருத்துவமனைக்கு இரவு நேரத்தில் கூடுதல் மருத்துவர், செவிலியர்களை நியமித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் அந்த மனுவில் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
செந்துறை ஜாமியா பள்ளிவாசல் சுன்னத் ஜமாத்தார்கள் அளித்த மனுவில் கடந்த 2012 ஆம் ஆண்டு செந்துறை சுன்னத் ஜமாத்தார்கள் 32 பேருக்கு பிற்பட்டோர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனை வழங்கப்பட்டது. ஆனால் நிலத்துக்கான பட்டா இதுவரை வழங்கப்படவில்லை. எனவே மாவட்ட ஆட்சியர் அவர்கள், வழங்கப்பட்ட நிலத்துக்கு அதற்குரிய பட்டாவை உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் சே.தனசேகரன், துணை ஆட்சியர் அ. பூங்கோதை, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் (பொ) ஜெ.பாலாஜி மற்றும் அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com