அரியலூர்

நவ.16-இல் மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டுப் போட்டிகள்

DIN

அரியலூர் மாவட்ட விளையாட்டு அரங்கில்  மாவட்ட அளவிலான மாற்றுத்திறனாளிகளுக்கான தடகளம் மற்றும் குழு விளையாட்டுப் போட்டிகள் நவம்பர் 16 ஆம் தேதி நடைபெறுகிறது என மாவட்ட ஆட்சியர் மு.விஜயலட்சுமி தெரிவித்துள்ளார். 
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
மாற்றுத்  திறனாளிகளுக்கான 2018-19 ஆம் ஆண்டுக்கான மாவட்ட அளவிலான தடகளம் மற்றும் குழுப் போட்டிகள் அரியலூர் மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் நவம்பர் 16 ஆம் தேதி காலை 9 மணிக்கு நடைபெறுகிறது. போட்டிகளில் பங்கேற்க வயது வரம்பு எதுவும் கிடையாது. 
தடகளம் : கை, கால் ஊனமுற்றோருக்கு 50 மீ. ஓட்டம், 100 மீ. ஓட்டம், கை ஊனமுற்றோர்,  குள்ளமானோருக்கு  50 மீ. ஓட்டம், கால் ஊனமுற்றோருக்கு-குண்டு எறிதல், இருகால்களும் ஊனமுற்றோருக்கு 100  மீ. சக்கர நாற்காலி போட்டியும் நடைபெற இருக்கிறது. மேலும், பார்வையற்றோருக்கு 50 மீ. ஓட்டம், மிகக் குறைந்த அளவு பார்வையற்றோருக்கு நின்ற நிலையில் நீளம் தாண்டுதல்,  முற்றிலும் பார்வையற்றோருக்கு  குண்டு எறிதல், மன நலம் பாதித்தோருக்கு 50 மீ. ஓட்டம், புத்தி சுவாதீனம்  முற்றிலும் இல்லாதோருக்கு 100 மீ. ஓட்டம் மற்றும் நின்ற நிலையில் நீளம் தாண்டுதல், காதுகேளாதோருக்கு  100மீ. மற்றும் 200 மீ. ஓட்டம், நீளம் தாண்டுதல், குண்டு  எறிதல் போன்ற போட்டிகளும் மற்றும் குழுப்போட்டிகளும் நடைபெறும்.       
அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த மாற்றுத் திறனாளிகள் அனைவரும் கலந்து கொள்ளலாம்.  ஆண்கள் மற்றும் பெண்களுக்கு தனித்தனியே  போட்டிகள்  நடைபெறும். மருத்துவச்சான்று அவசியம்.  பள்ளிகளில் பயில்வோர் அந்தந்த பள்ளியின் சார்பில் தங்களது விண்ணப்பப் படிவத்தை அனுப்பி வைக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அஜியோ கிரேசியா யங் ஃபேஷன் விருதுகள் 2024 - புகைப்படங்கள்

‘மற்றவர்களுக்கு தொல்லை தருவது காங்கிரஸின் கலாச்சாரம்’: மோடி காட்டம்!

தில்லி பந்துவீச்சு; 100-வது போட்டியில் ரிஷப் பந்த்!

கலங்கடிக்கும் வாழ்க்கைப் பதிவு.. ஆடு ஜீவிதம் - திரை விமர்சனம்!

மும்பையின் தோல்விக்குப் பிறகு சூர்யகுமார் யாதவ் கூறியது என்ன?

SCROLL FOR NEXT