குழந்தைத் திருமணம் இல்லாத மாவட்டமாக ஒத்துழைப்பு தேவை: அரியலூர் மாவட்ட ஆட்சியர்

அரியலூரை குழந்தைத் திருமணம் இல்லாத மாவட்டமாக உருவாக்க அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என்றார் ஆட்சியர் மு. விஜயலட்சுமி. 

அரியலூரை குழந்தைத் திருமணம் இல்லாத மாவட்டமாக உருவாக்க அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என்றார் ஆட்சியர் மு. விஜயலட்சுமி. 
இதுகுறித்த செய்திக் குறிப்பு: குழந்தைகள் தின வார விழாவை முன்னிட்டு அரியலூர் மாவட்டத்தில் சைல்டுலைன் மூலம் குழந்தைகள் தினம் கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் நவ. 13 முதல் 19 வரையில் அரசு அதிகாரிகளுக்கு ராக்கி கட்டுதல், மனித சங்கிலி விழிப்புணர்வு, குழந்தை திருமணத்துக்கு காரணம் பெற்றோரா குழந்தைகளா என பட்டிமன்றம், விளையாட்டு போட்டி போன்ற பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. பொதுமக்கள் தங்கள் குழந்தைகளிடம் அன்பாக நடந்து கொள்ள வேண்டும். 
அவர்களுக்கான உரிமைகளான வாழும் உரிமை, வளர்ச்சிக்கான உரிமை, பாதுகாப்பு பெறும் உரிமை மற்றும் பங்கேற்கும் உரிமை ஆகியவற்றை வழங்க வேண்டும். குழந்தைகளுக்கெதிரான பிரச்னைகளான குழந்தை திருமணம், குழந்தைக் கடத்தல்,குழந்தை தொழிலாளர் முறை ஒழித்தல் மற்றும் குழந்தைகளுக்கெதிரான பாலியல் குற்றங்கள் நடைபெறாதவாறு தடுத்தல் வேண்டும். மேலும் குழந்தைகளுக்கான தீங்கிழைத்தலான உடல் ரீதியான தீங்கிழைத்தல், மன ரீதியான தீங்கிழைத்தல், பாலியல் ரீதியான தீங்கிழைத்தல் மற்றும் புறக்கணித்தல் போன்றவை இல்லாமல் அனைவரும் அவர்களுக்கான உரிமையை வழங்க வேண்டும்.
ஆணுக்கு 21 வயது மற்றும் பெண்ணுக்கு 18 வயது பூர்த்தியாகாதவர்களுக்கு திருமணம் செய்தால்,குழந்தைத் திருமணமாக கருதப்படும். 
அவ்வாறு குழந்தை திருமணம் செய்தால் ரூ. 1 லட்சம் அபராதம் மற்றும் 2 ஆண்டு கடுங்காவல் தண்டனை அல்லது இரண்டும் சேர்த்து வழங்கப்படும். மேலும் குற்றமிழைத்தோர் மீது பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளை பாதுகாக்கும் சட்டத்தின்படி வழக்குப் பதிந்து 12 ஆண்டு வரை சிறை தண்டனை வழங்கவும் வழிவகை உள்ளது. எனவே அரியலூர் மாவட்டம் குழந்தை திருமணம் இல்லா மாவட்டமாக உருவாக அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் , பெண் கல்வியை ஊக்குவிக்க வேண்டும்.
குழந்தைகளுக்கு பாதுகாப்பான தொடுதல், பாதுகாப்பற்ற தொடுதல் மற்றும் உடல் உறுப்புகளை சுத்தமாக வைத்து கொள்ளுதல் போன்றவற்றை பெற்றோர் கற்றுத் தர வேண்டும், குழந்தைகளுக்கான பிரச்சனை இருந்தால் 24 மணி நேரமும் இயங்கும் குழந்தைகள் உதவி மையத்தை 1098 என்ற எண்ணில் தொடர்புக்கொள்ள வேண்டும்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com