ஊர்ப் பெயர்களை ஆங்கிலத்தில் எழுத ஆலோசனை கூறலாம்

ஊர்ப் பெயர்களை தமிழ் உச்சரிப்பை போன்று ஆங்கிலத்தில் எழுத தகவல் அளிக்கலாம் என அரியலூர் மாவட்ட ஆட்சியர் மு. விஜயலட்சுமி தெரிவித்துள்ளார்.

ஊர்ப் பெயர்களை தமிழ் உச்சரிப்பை போன்று ஆங்கிலத்தில் எழுத தகவல் அளிக்கலாம் என அரியலூர் மாவட்ட ஆட்சியர் மு. விஜயலட்சுமி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:தமிழ்நாட்டிலுள்ள ஊர்ப்பெயர்கள் தமிழ் உச்சரிப்பைப் போன்றே ஆங்கிலத்திலும் அமைத்திட நிகழாண்டு அரசாணை வெளியிடப்பட்டது.
உதாரணமாக, திருவல்லிக்கேணி என்பதை டிரிப்ளிகேன் என ஆங்கிலத்தில் குறிப்பிடாமல், திருவல்லிக்கேணி என்றே ஆங்கில உச்சரிப்புடன், எழுத்துக்கூட்டலும் அமையும் வகையில் அனைத்து ஊர்ப்பெயர்களும் அமைத்திட நடவடிக்கை எடுக்கப்படுகிறது. அதன் ஒரு பகுதியாக அரியலூர் மாவட்டத்தில் உயர் நிலைக்குழு, ஆலோசனைக் குழு அமைக்கப்படவுள்ளது.
இதன்மூலம், ஊர் பொதுமக்களிடமிருந்து பெறப்படும் ஊர்ப் பெயர்களின் பட்டியலை அதற்கு இணையான ஆங்கில எழுத்துக் கூட்டலை மாவட்ட ஆட்சியர் பரிந்துரையுடன் மாற்றி அமைக்கப்படவுள்ளது.மாற்றப்படவேண்டிய ஊர்களின் பெயர்ப் பட்டியலை குறிப்பிட்ட படிவ வரிசையில் நிறைவு செய்து, தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநர், தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநர் அலுவலகம், மாவட்ட ஆட்சியரகம், அரியலூர் - 621704   (a‌d‌t​a‌m‌i‌l​a‌r‌i‌y​a‌l‌u‌r@‌g‌m​a‌i‌l.​c‌o‌m) என்ற முகவரிக்கு பொதுமக்கள் அனுப்பி வைக்கலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com