அரியலூர் மாவட்டத்தில் நாளை அம்மா திட்டம் முகாம்

அரியலூர் மாவட்டத்தில் 6 கிராமங்களில் அம்மா திட்டம் முகாம் வெள்ளிக்கிழமை (நவ.23) நடைபெறுகிறது.

அரியலூர் மாவட்டத்தில் 6 கிராமங்களில் அம்மா திட்டம் முகாம் வெள்ளிக்கிழமை (நவ.23) நடைபெறுகிறது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் மு. விஜயலட்சுமி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: வருவாய்த் துறை சார்பில் அலுவலர்கள் கிராமங்களில் முகாமிட்டு, பொதுமக்களின் குறைகளைத் தீர்க்கும் வகையில் அவர்களிடமிருந்து மனுக்களைப் பெற்று அதன் அடிப்படையில் தீர்வு காணும் வகையில், மாவட்டத்தில் அம்மா திட்டம் முகாம் ஒவ்வொரு வட்டத்திலும் நடத்தப்பட்டு வருகிறது.
அதனடிப்படையில், அரியலூர் மாவட்டத்திலுள்ள ரெட்டிப்பாளையம், வெற்றியூர், தென்கட்சிபெருமாள்நத்தம், அரங்கராயநல்லூர் கிழக்கு, சிறுகடம்பூர், இலையூர் மேற்கு ஆகிய கிராமங்களில் வெள்ளிக்கிழமை அம்மா திட்டம் முகாம் நடைபெறும். வருவாய்த்துறையின் சமூகப் பாதுகாப்புத் திட்டங்கள், இலவச வீட்டுமனைப் பட்டாக்கள், பிறப்பு, இறப்புச் சான்றிதழ்கள், சாதி சான்றிதழ் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை தொடர்பான மனுக்களை பொதுமக்கள் அளித்து தீர்வுகாணலாம் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com