ஜயங்கொண்டம் அருகே பேருந்துகள் மோதல்; பெண் சாவு: 15 பேர் காயம்

அரியலூர் மாவ ட்டம், ஜயங்கொண்டம் அருகே வியாழக்கிழமை அரசுப் பேருந்தும், தனியார் பேருந்தும் மோதிக்கொண்ட

அரியலூர் மாவ ட்டம், ஜயங்கொண்டம் அருகே வியாழக்கிழமை அரசுப் பேருந்தும், தனியார் பேருந்தும் மோதிக்கொண்ட விபத்தில் பெண்  உயிரிழந்தார், 15 பேர் பலத்த காயமடைந்தனர்.
சென்னையில் இருந்து அரசுப் பேருந்து ஒன்று 20 பயணிகளுடன் கும்பகோணத்துக்கு வியாழக்கிழமை புறப்பட்டது. பேருந்தை வடலூரைச் சேர்ந்த ஜோதிவேல் (41) ஓட்டினார். நடத்துநராக சரவணன் இருந்தார். ஜயங்கொண்டம் அடுத்த சிலாலாம் கிராமம் அருகே கும்பகோணம் சாலையில் சென்ற இந்தப் பேருந்தும், எதிரே சென்னை நோக்கி வந்த தனியார் பேருந்தும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன. இதில் அரசுப் பேருந்தில் பயணித்த கும்பகோணம், பண்டாரவாடை கிராமத்தைச் சேர்ந்த சாகுல்ஹமீது மனைவி காதர்பீவி (34)  உயிரிழந்தார்.  பலத்த காயமடைந்த இவரின் கணவர் சாகுல்ஹமீது (41), அவரது குழந்தை அப்ரின்பாத்திமா(10), உறவினர்கள் நஸ்ரின் பானு (28 ), இவரது ஒன்றரை வயது மகள் ராகி பா, ஷேக் பாஷாவின் மனைவி ஹசீனா (38) , கார்குடி  கண்ணகி(40), காட்டுமன்னார்குடி சம்பத் மனைவி ராஜ பிரியா(34), இவரது தங்கை அறிவுக்கரசி(19), ராஜா மன்னார்குடியைச் சேர்ந்த புதியவன் மனைவி ஜெயலட்சுமி(36) , சென்னை சைதாப்பேட்டை சுப்ரமணியன் மகன் சங்கரமூர்த்தி (48) திருவாரூர் மாவட்டம் குன்னூர்  குருமூர்த்தி(38), நாகர்கோவில் ராமமூர்த்தி (38)  உள்ளிட்ட 15 பேரை தா. பழூர் போலீஸார் மீட்டு ஜயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். இவர்களில் பாத்திமா குழந்தை ராகி பா, ஷேக் பாட்சா, ஹசீனா ஆகியோர் மேல் சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டனர்.  விபத்து குறித்து தா.பழூர் போலீஸார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.  ஜயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோரை மாவட்ட ஆட்சியர் மு.விஜயலட்சுமி சந்தித்து ஆறுதல் கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com