வெள்ளிக்கிழமை 16 நவம்பர் 2018

எஸ்.சி.எஸ்.டி. பிரிவினர் ஈமக்கிரியை மானியத்துக்கு விண்ணப்பிக்கலாம்

DIN | Published: 11th September 2018 08:53 AM

அரியலூர் மாவட்டத்தில் ஆதிதிராவிட, பழங்குடியின மற்றும் மதம் மாறிய கிறிஸ்தவ ஆதிதிராவிடர் இறந்தால் ஈமக்கிரியை செய்வதற்காக மானியம் வழங்கும் திட்டத்திற்கு நடப்பு நிதியாண்டுக்கு ரூ.4 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.  
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் மு.விஜயலட்சுமி திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கை: மாவட்ட கிராம ஊராட்சிகளில் வசிக்கும் ஆதிதிராவிட, பழங்குடியின மற்றும் மதம் மாறிய கிறிஸ்தவ ஆதிதிராவிடர்களில் தகுதியுள்ளவர்கள் பயன்பெறும் நோக்கில் 2018-19ஆம் நிதியாண்டுக்கு ரூ.4 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இச்சலுகையை பெற தகுதியானவர்கள் சம்பந்தப்பட்ட கிராம நிர்வாக அலுவலரிடம் இறப்புச் சான்று பெற்று, ஈமச்சடங்கு உதவி பெறும் விண்ணப்பத்தை சம்பந்தப்பட்ட ஊராட்சி மன்றத் தனி அலுவலரிடம் அளித்து, ஈமச்சடங்கு மானியம் ரூ.2,500 பெற்றுக் கொள்ளலாம்.
 

More from the section

உண்டியல் பணத்தை திருடிய இளைஞர் கைது
குழந்தைத் திருமணம் இல்லாத மாவட்டமாக ஒத்துழைப்பு தேவை: அரியலூர் மாவட்ட ஆட்சியர்


தத்தனூர் கல்லூரியில் உலக கருணை நாள் கருத்தரங்கு

அதிகளவில் சி.சி.டி.வி. கேமரா  பொருத்த எஸ்.பி. உத்தரவு


"புயல், வெள்ளம் கண்காணிக்க 5 மண்டலக் குழுக்கள் அமைப்பு'