புதன்கிழமை 14 நவம்பர் 2018

அரியலூரில் வழக்குரைஞர்கள் ஆர்ப்பாட்டம்

DIN | Published: 12th September 2018 07:44 AM

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்றுள்ள 7 பேரை விடுதலை செய்யக் கோரி அரியலூர் நீதிமன்ற நுழைவு வாயில் முன் வழக்குரைஞர்கள் சங்கத்தினர் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் 7 பேரின் விடுதலையை தமிழக அரசே முடிவு செய்யலாம் என உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பின் அடிப்படையில் தமிழக அரசு ஆளுநருக்கு பரிந்துரை செய்தது. 
இந்த பரிந்துரை மீது ஆளுநர் உடனடியாக நடவடிக்கை எடுத்து அவர்களை விடுவிக்க ஆவன  செய்ய வேண்டும்.  
இதற்கு மத்திய அரசு ஒத்துழைக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. ஆர்ப்பாட்டத்துக்கு அச்சங்கத்தின் தலைவர் பழனிசாமி தலைமை வகித்தார்.
 

More from the section

அரியலூர் பால தண்டாயுதபாணி கோயிலில் சூரசம்ஹாரம்
குழந்தை விஞ்ஞானி விருதுபெற்ற மாணவர்களுக்கு பாராட்டு
உடையார்பாளையம் அருகே மது விற்றவர் கைது
பிளஸ்-2 பொதுத்தேர்வில்  தேர்ச்சி சதவீதத்தை உயர்த்த வேண்டும்
நவ.16-இல் மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டுப் போட்டிகள்