புதன்கிழமை 19 செப்டம்பர் 2018

கழிவு நீக்குதல் மேலாண்மை பயிற்சி

DIN | Published: 12th September 2018 07:43 AM

அரியலூர்அரசு தலைமை மருத்துவமனையில் தூய்மையே சேவை இயக்கம் சார்பில் உயிரி கழிவு நீக்குதல் மேலாண்மை பயிற்சி மற்றும்  கருத்தரங்கு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இந்த பயிற்சியில்,  மருத்துவக் கழிவுகளை எப்படி அகற்றுவது, பொது கழிவுகளுடன் மருத்துவ கழிவுகள் கலக்காமல் அகற்றுவது குறித்து விளக்கப்பட்டது. 
மாநில உயிரி கழிவு நீக்குதல் மேலாண்மை (பொ) அலுவலர் மருத்துவர் குருநாதன், சுகாதாரப் பணிகள் துணை இயக்குனர் ஹேமச்சந்திரகாந்தி, தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரிய செயற்பொறியாளர் இளமதி, அரியலூர் அரசு மாவட்ட தலைமை மருத்துவ கண்காணிப்பாளர் ரமேஷ், ஜயங்கொண்டம் உதவி மருத்துவ அலுவலர் மோகன் உட்பட ஏராளமான மருத்துவர்கள், செவிலியர்கள் உட்பட பலர்  கலந்துகொண்டனர்.

More from the section

மதுவிற்ற பெண் கைது
தனியார் சிமென்ட் ஆலைக்கு எதிராக  விவசாயிகள் போராட்டம்
அணைக்கரை பாலம் வழியே மீண்டும் பேருந்துகளை விடக்கோரி மறியல்


கல்லூரி மாணவரை தற்கொலைக்கு தூண்டியதாகப் பேராசிரியர் மீது வழக்கு

குறைகேட்புக் கூட்டத்தில் 303 மனுக்கள் அளிப்பு