வியாழக்கிழமை 22 நவம்பர் 2018

விவேகானந்தர் உரை தின கொண்டாட்டம்

DIN | Published: 12th September 2018 07:43 AM

அரியலூர் அருகே பள்ள கிருஷ்ணாபுரம் கிராமத்திலுள்ள ஊரட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில், சுவாமி விவேகானந்தர் சிகாகோ மாநாட்டில் உரையாற்றிய தினம் கொண்டாடப்பட்டது.
அமெரிக்கா நாட்டிலுள்ள சிகாகோ-வில் கடந்த 1893 செப். 11 ஆம் தேதி நடந்த உலக மதங்கள் மாநாட்டில் இந்தியா சார்பில் சுவாமி விவேகானந்தர் பங்கேற்று சொற்பொழிவு ஆற்றினார். அந்த நிகழ்ச்சியை கொண்டாடும் வகையில்,இடையத்தான்குடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு விவேகானந்தர் சிறப்பு திரைப்படம் காட்டப்பட்டது. 
தொடர்ந்து பாரதியாரின் நினைவு தினத்தை முன்னிட்டு நடத்தப்பட்ட போட்டிகளில் வெற்றிப் பெற்ற மாணவ,மாணவிகளுக்கு,பள்ளி தலைமை ஆசிரியை மங்கையர்க்கரசி பரிசு வழங்கினார். ஏற்பாடுகளை ஆசிரியர்கள் கதிரேசன், உமா ஆகியோர் செய்தனர்.
 

More from the section


அரசுப் பேருந்து ஓட்டுநரை தாக்கிய மைத்துனர் கைது

மதுபானம் விற்பனை செய்தவர் கைது


கஜா புயல்: ரூ..2 லட்சம் நிவாரண உதவி வழங்கிய எம்.ஆர். கல்வி நிறுவனங்கள்

அரியலூர் அருகே சாலையை சீரமைக்கக் கோரி மறியல்
அரியலூர் மாவட்டத்தில் நாளை அம்மா திட்டம் முகாம்