விதைகள், நாற்று இருப்புகள் செயலியில் பதிவிட வேண்டும்

விதைகள் மற்றும் நாற்று இருப்புகள் குறித்து உடனடியாக செயலியில் பதிவிட வேண்டும் என்றார் திருச்சி விதை ஆய்வு துணை இயக்குநர் ந.கண்ணன்.

விதைகள் மற்றும் நாற்று இருப்புகள் குறித்து உடனடியாக செயலியில் பதிவிட வேண்டும் என்றார் திருச்சி விதை ஆய்வு துணை இயக்குநர் ந.கண்ணன்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு:  அரியலூர் மாவட்டத்தில் தரமான விதைகள் விற்பனை செய்யும் விதை விற்பனை நிலையங்கள் மற்றும் விதை இருப்பைத் தெரிந்துகொள்ள பிரத்யேக செல்லிடப்பேசி செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அரியலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு விதை உரிமம் பெற்ற விதை விற்பனையாளர்கள் மற்றும் நாற்று பண்ணை விற்பனையாளர்கள் தங்களுடைய விதைகள் மற்றும் நாற்றுகள் இருப்பு குறித்த விபரங்களைப் பயிர் மற்றும் ரகம் வாரியாக பிரதிவாரம் வியாழக்கிழமை விதை செயலியில் பதிவு செய்திட அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் விவசாயிகள் தங்களுக்குத் தேவையான நல்ல தரமான விதைகளை அருகே உள்ள வேளாண் விரிவாக்க மைய த்தில் வாங்கிப் பயனடையலாம். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com