அமைதியைக் குலைக்க நினைத்தால் சட்ட ரீதியாக நடவடிக்கை

அமைதியைக் குலைக்க யார் நினைத்தாலும் சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் அதிமுக பெரம்பலூர் மாவட்டச் செயலாளரும், குன்னம் எம்எல்ஏ-வுமான ஆர்.டி.ராமச்சந்திரன்.செந்துறை அடுத்த தளவாய் கிராமத்தில் தரம் உயர்த்தப்பட்ட அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற விழாவில் பங்கேற்ற அவர் பின்னர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:எங்களது இரட்டை இலை சின்னத்தில் வெற்றிபெற்ற கருணாஸ், பொதுவாழ்க்கையை விட்டுவிட்டு தற்போது சமுதாய வாழ்க்கையில் ஈடுபட்டுள்ளது அவரது சமுதாய மக்களை சந்தோஷப்படுத்தும். ஆனால், தமிழகத்தில் அமைதியைக் குலைக்கும் வகையில் யார் நடந்து கொண்டாலும் தமிழக அரசு சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளும்.ஜெயலிலதா அறிவித்த திட்டங்கள் தான் தற்போதும் சிறப்பாக செயல்படுத்தப்படுகிறது. ஜெயலிலதா மறைவுக்கு பிறகு எதிரிகட்சிகளும், உதிரிகட்சிகளும் துள்ளலாட்டம் போடுகின்றன. ஆளும் கட்சிக்கு எதிராக மக்கள் யாரும் போராடவில்லை. சட்டரீதியாக கழகத்தினர் மீது வழக்கு பதியப்படும் போது அதிமுக ஒருங்கிணைப்பாளரும், இணை ஒருங்கிணைப்பாளரும் உரிய நடவடிக்கை மேற்கொள்வர் என்றார். 

அமைதியைக் குலைக்க யார் நினைத்தாலும் சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் அதிமுக பெரம்பலூர் மாவட்டச் செயலாளரும், குன்னம் எம்எல்ஏ-வுமான ஆர்.டி.ராமச்சந்திரன்.
செந்துறை அடுத்த தளவாய் கிராமத்தில் தரம் உயர்த்தப்பட்ட அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற விழாவில் பங்கேற்ற அவர் பின்னர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:
எங்களது இரட்டை இலை சின்னத்தில் வெற்றிபெற்ற கருணாஸ், பொதுவாழ்க்கையை விட்டுவிட்டு தற்போது சமுதாய வாழ்க்கையில் ஈடுபட்டுள்ளது அவரது சமுதாய மக்களை சந்தோஷப்படுத்தும். ஆனால், தமிழகத்தில் அமைதியைக் குலைக்கும் வகையில் யார் நடந்து கொண்டாலும் தமிழக அரசு சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளும்.
ஜெயலிலதா அறிவித்த திட்டங்கள் தான் தற்போதும் சிறப்பாக செயல்படுத்தப்படுகிறது. ஜெயலிலதா மறைவுக்கு பிறகு எதிரிகட்சிகளும், உதிரிகட்சிகளும் துள்ளலாட்டம் போடுகின்றன. ஆளும் கட்சிக்கு எதிராக மக்கள் யாரும் போராடவில்லை. சட்டரீதியாக கழகத்தினர் மீது வழக்கு பதியப்படும் போது அதிமுக ஒருங்கிணைப்பாளரும், இணை ஒருங்கிணைப்பாளரும் உரிய நடவடிக்கை மேற்கொள்வர் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com