பெருமாள் கோயில்களில் புரட்டாசி மாத சிறப்பு வழிபாடு

புரட்டாசி முதல் சனிக்கிழமையையொட்டி அரியலூர் மாவட்டத்தில் உள்ள பெருமாள் கோயில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் பக்தர்கள் திரளாகப் பங்கேற்று தரிசனம் செய்தனர்.


புரட்டாசி முதல் சனிக்கிழமையையொட்டி அரியலூர் மாவட்டத்தில் உள்ள பெருமாள் கோயில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் பக்தர்கள் திரளாகப் பங்கேற்று தரிசனம் செய்தனர்.
புரட்டாசி சனிக்கிழமைகளில் பெருமாளை வழிபட்டால் எல்லாவிதமான கஷ்டங்களும் நீங்கி வளமான வாழ்வு கிட்டும் என்பது ஐதிகம்.
நிகழாண்டு புரட்டாசி முதல் சனிக்கிழமையையொட்டி அரியலூர் மாவட்டத்திலுள்ள அனைத்து பெருமாள் கோயில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. மக்கள் விரதமிருந்து பெருமாளை தரிசித்துச் சென்றனர்.
அரியலூர் அருகேயுள்ள கல்லங்குறிச்சி கலியுக வரதராஜபெருமாள் கோயிலில் புரட்டாசி முதல் சனிக்கிழமை சிறப்பு வழிபாடு நடைபெற்றது. காலை சுப்ரபாத சேவை, விஷ்வரூப தரிசனம் ஆகியவற்றிற்கு பின் பெருமாள், தாயார் ஸ்ரீதேவி, பூதேவி உற்ஸவர்களுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து பெருமாள், தாயாருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. துளசி அர்ச்சனை, அலங்கார தீப வழிபாடு, மந்திர உபசார பூஜைகள் நடைபெற்றது. இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். இதேபோல் அரியலூர் கோதண்டராம கோயில் மற்றும் திருமானூர், திருமழபாடி, தா.பழூர்,ஜயங்கொண்டம், ஆண்டிமடம், செந்துறை ஆகிய பகுதிகளில் உள்ள பெருமாள் கோயில்களில் சிறப்பு வழிபாடு,பூஜைகள் நடைபெற்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com