பெரம்பலூர் அருகே  குடிநீர் கோரி மறியல் போராட்டம்

பெரம்பலூர் மாவட்டம், குரும்பலூர் பேரூராட்சியில் முறையாக குடிநீர் விநியோகிக்கக் கோரி பொதுமக்கள் காலிக் குடங்களுடன் சாலை மறியல் போராட்டத்தில் சனிக்கிழமை ஈடுபட்டனர்.  


பெரம்பலூர் மாவட்டம், குரும்பலூர் பேரூராட்சியில் முறையாக குடிநீர் விநியோகிக்கக் கோரி பொதுமக்கள் காலிக் குடங்களுடன் சாலை மறியல் போராட்டத்தில் சனிக்கிழமை ஈடுபட்டனர்.  
குரும்பலூர் பேரூராட்சிக்குள்பட்ட பகுதிகளில் சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். இங்குள்ள குடியிருப்புகளுக்கு கடந்த 20 நாள்களுக்கும் மேலாக குடிநீர் விநியோகிக்கவில்லையாம். இதுகுறித்து பேரூராட்சி நிர்வாகம் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர்களிடம் பலமுறை புகார் அளித்தும், எந்த நடவடிக்கையும் இல்லையாம்.
இதனால் ஆத்திரமடைந்த அந்தப் பகுதியைச் சேர்ந்த சுமார் 100க்கும் மேற்பட்டோர் பெரம்பலூர் துறையூர் சாலையில் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். 
தகவலறிந்த பெரம்பலூர் போலீஸார் மற்றும் வருவாய்த் துறையினர் சம்பவ இடத்துக்குச் சென்று பேச்சுவார்த்தை நடத்தி, தடையின்றி குடிநீர் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். 
இதையடுத்து மறியல் கைவிடப்பட்டது. மறியலால் பெரம்பலூர்  துறையூர் சாலையில் சுமார் அரை மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com