அரியலூர், ஜயங்கொண்டத்தில்  ஏப். 26-இல் விளையாட்டு பயிற்சி முகாம் தொடக்கம்

உலகத் திறனாய்வுத் திட்டத்தின் கல்வி மாவட்ட அளவிலான பயிற்சி முகாம்கள் அரியலூர், ஜயங்கொண்டத்தில் ஏப். 26-ஆம் தேதி தொடங்குகிறது.


உலகத் திறனாய்வுத் திட்டத்தின் கல்வி மாவட்ட அளவிலான பயிற்சி முகாம்கள் அரியலூர், ஜயங்கொண்டத்தில் ஏப். 26-ஆம் தேதி தொடங்குகிறது.
இதுகுறித்து மாவட்ட விளையாட்டு அலுவலர் ஜெயகுமார்ராஜா வெளியிட்ட செய்திக் குறிப்பு:
கல்வி மாவட்ட அளவிலான பயிற்சி முகாம் அரியலூர் மாவட்ட விளையாட்டரங்கத்திலும், உடையார்பாளையம் கல்வி மாவட்ட அளவிலான பயிற்சி முகாம்  ஜயங்கொண்டம் அரசு மேல்நிலைப் பள்ளி மைதானத்திலும் ஏப். 26 முதல் 30 வரை தினமும் காலை 6.45 மணி முதல் 9.30 மணி வரை நடைபெறும்.
6,7,8 வகுப்புகளில் திறனாய்வுத் தேர்வுகளில் தேர்ச்சிப் பெற்று, கல்வி மாவட்ட அளவிலான உலகத் திறனாய்வு திட்ட தடகளப் போட்டிகளிலும் ஒவ்வொரு வயது பிரிவு மற்றும் தடகளப் போட்டி பிரிவுகளில் முதல் 10 இடங்களைப் பிடித்த மாணவ, மாணவிகள் மட்டுமே தகுதி உடையவராவர். எனவே தகுதியுடையவர்கள் பயிற்சி நாளான்று விளையாட்டு உடையில் வர வேண்டும். பயணப்படி வழங்கப்பட மாட்டாது. முகாமில் தேர்வு செய்யப்படும் மாணவ,மாணவிகளை 1.5.2019 முதல் 15.5.2019 வரை அரியலூர் மாவட்ட விளையாட்டு அரங்கில் நடைபெறவுள்ள இருப்பட பயிற்சி முகாமில் பங்கேற்கச் செய்து அனைத்து விளையாட்டுகளிலும் பயிற்சியளித்து சத்தான உணவு மற்றும் விளையாட்டு விளையாட்டு சீருடைகள் வழங்கப்படும்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com