தொடக்க, மேல்நிலைப் பள்ளிகளில் கல்விச்சீர் வழங்கல்

அரியலூர் மாவ ட்டம் தா.பழூர் அருகே காரைக்குறிச்சி கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் கல்வித் திருவிழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.


அரியலூர் மாவ ட்டம் தா.பழூர் அருகே காரைக்குறிச்சி கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் கல்வித் திருவிழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
விழாவுக்கு, வட்டாரக் கல்வி அலுவலர் ராசாத்தி தலைமை வகித்தார். விழாவுக்கு வருகை தந்த குழந்தைகளின் பெற்றோர்கள் மேளதாளத்துடன் பள்ளிக்குத் தேவையான கணினி பிரிண்டர், பீரோ,10 நாற்காலிகள், 10 சாய்வு திறன் கொண்ட நாற்காலி,  ஒலிப்பெருக்கி உள்பட ரூ. 35 ஆயிரம் மதிப்பிலான பொருள்களை அன்பளிப்பாக வழங்கினர்.
விழாவில், வட்டாரக் கல்வி அலுவலர் கலியபெருமாள், பள்ளி மேலாண்மை குழுத் தலைவர் ரேகா, பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் பழனிவேல், ஆசிரியர் பயிற்றுநர் கண்ணதாசன், காரைக்குறிச்சி அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ராஜேந்திரன், தலைமை ஆசிரியர் முருகு பாண்டியன் மற்றும் ஆசிரியர்கள், மாணவர்களின் பெற்றோர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
நடுநிலைப் பள்ளியில்  ரூ. 50 ஆயிரம் மதிப்பில் பொதுமக்கள் சீர்: 
அரியலூர் மாவட்டம், விக்கிரமங்கலம் அடுத்த தா.பழூர் அருகேயுள்ள கோரைக்குழி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் பொதுமக்கள் சார்பில் ரூ.50 ஆயிரம் மதிப்பிலான சீர்வரிசை வழங்கும் விழா சனிக்கிழமை நடைபெற்றது.
மேள தாளத்துடன் ஊர்வலமாக வந்த பொதுமக்கள், ரூ. 50 ஆயிரம் மதிப்பிலான பீரோ, நாற்காலிகள், மின் விசிறி உள்ளிட்ட தளவாடப் பொருள்களை தலைமை ஆசிரியை அருள்செல்வி கதிர்வேலிடம் வழங்கினர். தா.பழூர் வட்டார கல்வி அலுவலர்கள் கலியபெருமாள், ராசாத்தி ஆகியோர்  கலந்து கொண்டனர். உதவி ஆசிரியர் சகாயராஜ் நன்றி கூறினார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com