திருமழபாடி வைத்தியநாத சுவாமி கோயில் மாசிமகப் பெருவிழா தொடக்கம்

அரியலூர் மாவட்டம் திருமழபாடி வைத்தியநாத சுவாமி கோயில் மாசிமகப் பெருவிழா கொடியேற்றத்துடன் ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது.

அரியலூர் மாவட்டம் திருமழபாடி வைத்தியநாத சுவாமி கோயில் மாசிமகப் பெருவிழா கொடியேற்றத்துடன் ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது.
திருமானூர் அருகேயுள்ள திருமழபாடியில் இந்து சமய அறநிலையத் துறைக்குச் சொந்தமான சுந்தராம்பிகை உடனாய வைத்தியநாத சுவாமி கோயில் உள்ளது. இந்த கோயில், அப்பர், சுந்தரர், திருஞானசம்பந்தர் ஆகிய மூவரால் பாடல் பெற்ற தலமாகும். இங்கு ஆண்டுதோறும் மாசிமகப் பெருவிழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம். நிகழாண்டு மாசிமகப் பெருவிழா ஞாயிற்றுக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
நிகழ்ச்சியில், சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து கோயில் வளாகத்தில் அதிகார நந்திக்கு அருகே உள்ள 61 அடி உயர கொடி கம்பத்திற்கு மஞ்சள், சந்தனம், மாவு பொடி, திரவியப் பொடி, பன்னீர், இளநீர், தயிர், பால் மற்றும் புனித நீரால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்று, வேத மந்திரங்கள் முழங்க விநாயகர், சுந்தராம்பிகை உடனாய வைத்தியநாத சுவாமி, வள்ளி தெய்வானை சமேத முருகன் ஆகிய சுவாமிகள்  முன் வீற்றிருக்க நந்தியெம்பெருமான் உருவம் தாங்கிய கொடி, கம்பத்தில் ஏற்றப்பட்டது.
தொடர்ந்து, சுவாமி மற்றும் கொடிக் கம்பத்துக்கு சிறப்பு தீபாராதனை காண்பிக்கப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. 
விழா ஏற்பாடுகளை கோயில் நிர்வாகம் மற்றும் கிராம மக்கள் செய்திருந்தனர். விழாவில் தொடர்ந்து ஒவ்வொரு நாளும் இரவு சுவாமிகள் வீதியுலா காட்சி நடைபெறுகிறது. விழாவின் முக்கிய நாளான பிப்.18 ஆம் தேதி அன்று தேரோட்டம் நடைபெறுகிறது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com