சாலைப் பாதுகாப்பு: சிமென்ட் ஆலைகளுக்கு அறிவுறுத்தல்

அரியலூர் மாவட்டத்திலுள்ள அனைத்து சிமென்ட் ஆலைகளும் சாலைப்  பாதுகாப்புக்கு  முக்கியத்துவம் அளிக்க

அரியலூர் மாவட்டத்திலுள்ள அனைத்து சிமென்ட் ஆலைகளும் சாலைப்  பாதுகாப்புக்கு  முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்றார் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீனிவாசன்.
அரியலூர் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற கூட்டத்தில் அவர் மேலும் பேசியது:
சாலை விபத்துக்கள் இல்லா மாவட்டமாக அரியலூரை மாற்றுவதற்கு இங்குள்ள அனைத்து சிமென்ட் ஆலைகளும் சாலை பாதுகாப்புக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும். 
சிமென்ட் ஆலை மற்றும் சுரங்கங்களுக்கு இயக்கப்படும் லாரிகள், பள்ளி நேரங்களான காலை, மாலைகளில் இயக்கக் கூடாது.அப்படி இயக்கப்பட்டால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.  அதேபோல இரு சக்கர வாகன ஓட்டிகள் தலைக்கவசம் அணிய வேண்டும்.  
மேலும் இங்குள்ள சிமென்ட் ஆலைகள் மாவட்ட நிர்வாகத்துக்கும், காவல்துறைக்கும் ஒத்துழைத்து தேவையான இடங்களில் தடுப்பு வேலிகள்,தடுப்புக் கட்டைகள்,வேகைத்தடைகள் மற்றும் சிசிடிவி கேமராக்கள் அமைக்க வேண்டும். 
மணல் கொள்ளையில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் அவர். 
கூட்டத்தில் அரியலூர் உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் மோகன்தாஸ், ஜயங்கொண்டம் உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் கென்னடி மற்றும் போக்குவரத்து காவல் ஆய்வாளர்கள்,அரியலூர் மாவட்டத்திலுள்ள அனைத்து சிமென்ட் ஆலை மற்றும் சுண்ணாம்புக் கல் சுரங்க மேலாளர்கள்  கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com