சிஆர்பிஎஃப் வீரர்கள் மீதான தாக்குதலை அரசியலாக்க வேண்டாம்

காஷ்மீர் மாநில பயங்கரவாத தாக்குதலை அரசியலாக்க வேண்டாம் என்றார் பாரதிய ஜனதா கட்சியின் தேசியச் செயலர் ஹெச். ராஜா.  

காஷ்மீர் மாநில பயங்கரவாத தாக்குதலை அரசியலாக்க வேண்டாம் என்றார் பாரதிய ஜனதா கட்சியின் தேசியச் செயலர் ஹெச். ராஜா.  
பயங்கரவாத தாக்குதல் சம்பவத்தைக் கண்டித்து, பெரம்பலூர் புறநகர் பேருந்து நிலைய வளாகத்தில் பாஜக சார்பில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில்  அவர் மேலும் பேசியது:
இந்தியாவுடன் நேரடியாக யுத்தத்தில் ஈடுபட முடியாததால் தீவிரவாதத்தை பாகிஸ்தான் தூண்டிவிட்டு நம் நாட்டில் பிரச்னைகளை ஏற்படுத்துகிறது. அமெரிக்காவில் இரட்டைக் கோபுரம் பயங்கரவாதிகளால் தாக்கப்பட்டபோது, அந்நாட்டின் உளவுத்துறை, ராணுவம் தோல்வியடைந்ததாக யாரும் தவறாக பேசவில்லை. ஆனால், நம் நாட்டில் ராணுவத்தின் செயல்பாடு குறித்து எதிர்மறை விமர்சனம் செய்கின்றனர். இந்த சம்பவத்தை ஒரு அரசியல் விவாதமாக மாற்ற நினைப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது. இதை தேசிய பிரச்னையாக அணுக வேண்டும். என்றார்  ராஜா. தொடர்ந்து, பாகிஸ்தான் பிரதமரின் உருவ பொம்மையை எரித்து, அந்நாட்டுக்கு எதிராக முழக்கமிட்டனர். அக்கட்சியின் மாவட்டத் தலைவர் சாமி. இளங்கோவன் தலைமையில் நடைபெற்ற  ஆர்ப்பாட்டத்தில், அக்கட்சியின் கோட்ட பொறுப்பாளர் எம். சிவசுப்பிரமணியம், கோட்ட இணைச் செயலர் இல. கண்ணன், மாநில செயற்குழு உறுப்பினர் சி. சந்திரசேகரன், மாவட்ட பொதுச் செயலர் குரு. ராஜேஷ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com