அரியலூர்

கொள்ளிடம் ஆற்றில் மாட்டுவண்டி மணல் குவாரி கோரி மறியல் முடிவு

DIN

அரியலூர் மாவட்டம், தா. பழூர் கொள்ளிடம் ஆற்றில் மணல் குவாரி அமைத்து மாட்டு வண்டிக்கு மட்டும் மணல் அள்ள அனுமதி அளிக்கக் கோரி வரும் 31 ஆம் தேதி ஆட்சியரகம் முன் மாட்டு வண்டிகள் மற்றும் குடும்பத்தினருடன் மறியல் போராட்டம் நடத்துவது என மாட்டுவண்டி தொழிலாளர் சங்கக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தா. பழூரில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற கூட்டத்தில்,  தா.பழூர் பகுதி கொள்ளிடம் ஆற்றில் மாட்டுவண்டிகளுக்கு மணல் குவாரி 2 மாதத்தில் அமைக்கப்படும் என வட்டாட்சியரகத்தில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் ஒப்பந்தம் போடப்பட்ட நிலையில், தற்போது வரை கிடப்பில் போடப்பட்டுள்ளது. தொகுப்பு வீடுகளுக்கு மணல் அள்ள அனுமதி அளித்தும் காவல்துறையினர் மாட்டுவண்டி தொழிலாளர்களை கைது செய்கின்றனர்.
இதனால் மாட்டுவண்டி தொழிலாளர்கள் பொங்கல் கூட கொண்டாட முடியாத நிலை ஏற்பட்டது. எனவே, வரும் 31 ஆம் தேதி ஆட்சியரகம் முன்பு 500-க்கும் மேற்பட்ட மாட்டு வண்டிகள் மற்றும்  மாட்டுவண்டி தொழிலாளர்கள் குடும்பத்தினர் சாலை மறியல் செய்வது,
தா.பழூர் ஒன்றியத்தில் கைது செய்யப்பட்ட மாட்டுவண்டி தொழிலாளர்களை நிபந்தனையின்றி விடுதலை செய்ய வேண்டும். உடையார்பாளையம், ஜயங்கொண்டம், மீன்சுருட்டி, விக்கிரமங்கலம், ஆண்டிமடம் உள்ளிட்ட காவல் நிலையங்களில் பறிமுதல் செய்யப்பட்டு வைக்கப்பட்டுள்ள மாட்டு வண்டிகளை உடனடியாக வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாட்டுவண்டி தொழிலாளர் சங்க மாவட்டச் செயலர் மதியழகன் தலைமை வகித்தார். மாவட்டத் தலைவர் பாலமுருகன், அகில இந்திய தொழிலாளர் சங்க மாவட்ட செயலர் இளங்கோவன், மார்க்சிஸ்ட் கம்யூ. ஒன்றியச் செயலர் ராதாகிருஷ்ணன் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தேர்தல் பிரசாரத்தில் கமல்!

படே மியன் சோட்டே மியன் டிரெயிலர் வெளியீட்டு விழா - புகைப்படங்கள்

ரியான் பராக் அதிரடி: தில்லிக்கு 186 ரன்கள் இலக்கு!

மதுபான விடுதி: மேற்கூரை இடிந்து 3 பேர் பலி!

தில்லிக்காக 100-வது போட்டியில் விளையாடும் முதல் வீரர் ரிஷப் பந்த்; மற்ற அணிகளுக்கு யார் தெரியுமா?

SCROLL FOR NEXT