வி.கைகாட்டி மகாசக்தி மாரியம்மன் கோயிலில் தைப்பூச திருவிழா

அரியலூர் மாவட்டம் வி.கைகாட்டி அருள்மிகு மகாசக்தி மாரியம்மன் கோயிலில் தைப்பூசத் திருவிழா திங்கள்கிழமை நடைபெற்றது.

அரியலூர் மாவட்டம் வி.கைகாட்டி அருள்மிகு மகாசக்தி மாரியம்மன் கோயிலில் தைப்பூசத் திருவிழா திங்கள்கிழமை நடைபெற்றது.
இக்கோயிலில் ஆண்டுதோறும் தைப்பூசத் திருவிழா சிறப்பாக நடத்தப்படுவது வழக்கம். நிகழாண்டு தைப்பூச விழாவையொட்டி, திங்கள்கிழமை காலை ஆயிரக்கணக்கான பக்தர்கள் பால்குடம், தீச்சட்டி எடுத்தும்,  காவடி மற்றும் பாடை காவடித் தூக்கி வந்தும், அலகுகுத்தியும் தங்கள் நேர்த்திக் கடனைச் செலுத்தினர். மேலும், கோயில் வளாகத்தில் பொதுமக்கள் பொங்கல் வைத்து வழிபாடு நடசத்தினர். தைப்பூசத் திருவிழா ஏற்பாடுகளை திருக்கோயில் நிர்வாகத்தினரும், பொதுமக்களும் செய்திருந்தனர். 
இதுபோன்று, அரியலூர்-பெரம்பலூர் சாலையிலுள்ள அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் தைப்பூசத்தையொட்டி,  முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம்,ஆராதனை நடைபெற்றது. ஏராளானபக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.
வில்லேந்திய வேலவர் திருவீதியுலா :  அரியலூர் மாவட்டம், தா.பழூரில் தைப்பூசத்தையொட்டி வில்லேந்திய வேலவர் திருவீதியுலா திங்கள்கிழமை நடைபெற்றது.
தா.பழூர் விசாலாட்சி உடனுறை விசுவநாதர் கோயிலில் திங்கள்கிழமை நடைபெற்ற தைப்பூச திருவிழாவில், கோயில் வளாகத்திலுள்ள வள்ளி- தேவசேனா சமேத  வில்லேந்திய வேலவருக்கு மஞ்சள், பால், தயிர், சந்தனம், இளநீர் உள்ளிட்ட பல்வேறு பொருள்களைக் கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைப்பெற்றது.
தொடர்ந்து மகா தீபாராதனைக்குப் பின்னர் பக்தர்களுக்கு கோயில் குருக்கள் செந்தில் பிரசாதங்களை வழங்கினார். இதைத் தொடர்ந்து மாலையில் உற்சவ மூர்த்தி சிறப்பு அலங்காரத்தில் பல்லக்கில் எழுந்தருளி வீதியுலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார்.  ஏற்பாடுகளை விழாக் குழுவினர் செய்து இருந்தனர்.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com