கேஸ் சிலிண்டர்களில் முழுமையான வாக்குப்பதிவு விழிப்புணர்வு வில்லைகள்

அரியலூர் மாவட்டத்தில் 100 சதவீதம் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி கேஸ் சிலிண்டர்களில் விழிப்புணர்வு வில்லைகள் சனிக்கிழமை ஒட்டப்பட்டன.


அரியலூர் மாவட்டத்தில் 100 சதவீதம் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி கேஸ் சிலிண்டர்களில் விழிப்புணர்வு வில்லைகள் சனிக்கிழமை ஒட்டப்பட்டன.
வரும் மக்களவை பொதுத்தேர்தலில் மக்கள் 100 சதவீதம் வாக்களிக்க வேண்டு என்பதை வலியுறுத்தி பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை இந்திய தேர்தல் ஆணையம் நடத்தி வருகிறது. இந்நிலையில், அரியலூர் மாவட்டத்திலுள்ள கேஸ் சிலிண்டர்களில் 100 சதவீதம் வாக்களிக்க வேண்டும் என அச்சடிக்கப்பட்ட வில்லைகளை மாவட்ட ஆட்சியர் மு.விஜயலட்சுமி சனிக்கிழமை ஒட்டி விழிப்புணர்வைத் தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் வருவாய் கோட்டாட்சியர் சத்தியநாராயணன், மாவட்ட வழங்கல் அலுவலர் ரவிசந்திரன், வட்டாட்சியர் கதிரவன், பாரத் கேஸ் ஏஜென்சீஸ் உரிமையாளர் அனுராதா பார்த்தசாரதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com