திரௌபதி அம்மன் கோயிலில் தீ மிதி திருவிழா

அரியலூர் மாவட்டம், நக்கம்பாடி திரௌபதியம்மன் கோயில் தீமிதி திருவிழாவை முன்னிட்டு அரவான் பலிகொடுக்கும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

அரியலூர் மாவட்டம், நக்கம்பாடி திரௌபதியம்மன் கோயில் தீமிதி திருவிழாவை முன்னிட்டு அரவான் பலிகொடுக்கும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இக்கோயில் திருவிழா கடந்த மாதம் 26 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.தொடர்ந்து மகாபாரத சொற்பொழிவு நிகழ்ச்சிகள்நடைபெற்றன
விழாவின் 18 ஆம் நாளான வெள்ளிக்கிழமை காளிக்கு அரவான் பலிகொடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. 
இந்நிகழ்ச்சியில்  சொக்கநாதபுரம், வஞ்சனபுரம், பெரும்மாண்டி உள்ளிட பல்வேறு பகுதியில் இருந்து பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர். மேலும் குழந்தை பாக்கியம் இல்லாத பெண்கள் அரவான் பலிகொடுக்கும் ரத்தம் கலந்த சாதம் சாப்பிட்டால், குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பதால் ஏராளமான பெண்கள் அதனை வாங்கி பிரசாதமாக சாப்பிட்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com