அரியலூர்

நிரந்தரப் பட்டா வழங்கக் கோரி பொதுமக்கள் சாலை மறியல்

DIN

திருமானூர் அருகே நிரந்தரப் பட்டா வழங்க கோரி, மேலவரப்பன்குறிச்சி புதுகாலனித் தெரு மக்கள் வெள்ளிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர்.
திருமானூர் அருகிலுள்ள மேலவரப்பன்குறிச்சி புதுகாலனித் தெருவில் 45-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் சுமார் 35 ஆண்டுகளுக்கு மேலாக வசித்து வருகின்றனர். இவர்களுக்கு வருவாய்த் துறையினர் இலவச வீட்டுமனைப் பட்டா வழங்கியும் இதை வைத்து அரசு நிவாரணம், சலுகைகள் எதையும் பெற முடியவில்லையாம். குடியிருக்கும் வீடுகளுக்கு மின் இணைப்புக் கூடபெற முடியாத நிலையில்தான் இப்பகுதி மக்கள் உள்ளனர். தங்களுக்கு நிரந்தரப் பட்டா வழங்கக் கோரி மாவட்ட நிர்வாகத்திடம் பலமுறை வலியுறுத்தியும் நடவடிக்கை இல்லாததால், வெள்ளிக்கிழமை காலை ஏலாக்குறிச்சி- தூத்தூர் சாலையில் மேலவரப்பன்குறிச்சி காலனித் தெரு மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். தகலறிந்து வந்த ஏலாக்குறிச்சி வருவாய் ஆய்வாளர் அய்யப்பன் மற்றும் தூத்தூர் போலீஸார் மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது,  உரிய நடவடிக்கை எடுக்க அரசுக்குப் பரிந்துரைக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். இதையடுத்து பொதுமக்கள் மறியலை கைவிட்டு கலைந்துச் சென்றனர்.

செந்துறையில் திமுகவினர்...
பொள்ளாச்சி விவகாரத்தில் தொடர்புடைய குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும்,நக்கீரன் கோபால்,திமுக தலைவர் ஸ்டாலின் மருமகன் சபரீசன் மீது வழக்கு தொடரப்பட்டதை கண்டித்தும் அரியலூர் மாவட்டம் செந்துறை அண்ணாசிலை  அருகே திமுகவினர் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சாலை மறியல்  முயற்சி: அதிமுக அலுவலகம் முன்பு உள்ள அண்ணா மற்றும் எம்ஜிஆர் சிலையை தேர்தல் அதிகாரிகள் மறைக்காமல், திமுக அலுவலகம் முன்பு உள்ள அண்ணா சிலை மட்டும் மறைத்ததைக் கண்டித்து திமுகவினர் சாலை மறியலில் ஈடுப்பட முயன்றதால் பரப்பரப்பு ஏற்பட்டது.
ஆர்ப்பாட்டத்துக்கு, ஒன்றியச் செயலர்(தெற்கு) ஞானமூர்த்தி தலைமை வகித்தார். மாநிலத் துணை கொள்கைபரப்புச் செயலர் பெருநற்கிள்ளி, திக மாவட்டச் செயலர் விடுதலை நீலமேகம். திமுக ஒன்றியச் செயலர் (வடக்கு) செல்வராஜ், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்டச் செயலர் செல்வநம்பி, திமுக மகளிரணி சித்ரா உள்ளிட்டோர் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இரட்டை ரயில் பாதை பணி: நாகா்கோவில் செல்லும் ரயில்கள் ரத்து!

உஜ்ஜைனி காளியம்மன் கோயிலில் இன்று அக்னி கப்பரை வழிபாடு

நாலாட்டின்புதூரில் ரூ. 80 ஆயிரம் பறிமுதல்

சமூக நீதிக்கான குரல் நாடாளுமன்றத்தில் ஒலிக்க வேண்டும் -தொல். திருமாவளவன்

தொடா் விடுமுறை: ஆம்னி பேருந்துகளின் கட்டணம் உயா்வு! மதுரைக்கு ரூ.3,000, நாகா்கோவிலுக்கு ரூ.4,000

SCROLL FOR NEXT