பங்குனி உத்திர தேரோட்டம்: கோயில்களில் சிறப்பு வழிபாடு, தேரோட்டம்..

பங்குனி உத்திரத்தை முன்னிட்டு அரியலூர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில் முருகப் பெருமானுக்கு வியாழக்கிழமை சிறப்பு வழிபாடு நடைபெற்றது. 

பங்குனி உத்திரத்தை முன்னிட்டு அரியலூர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில் முருகப் பெருமானுக்கு வியாழக்கிழமை சிறப்பு வழிபாடு நடைபெற்றது. 
அரியலூர் ஆலந்துறையார் கோயில் சன்னதியில் உள்ள அருள்மிகு முருகனுக்கும் , பெரம்பலூர் சாலையில் உள்ள அருள்மிகு பாலசுப்பிரமணியன் சுவாமி திருக்கோயிலிலும் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. செந்துறை நெய்வனத்தில் அமைந்துள்ள பழைமை வாய்ந்த செல்வசுப்ரணியர் திருக்கோயிலில் பங்குனி உத்திரத்தை முன்னிட்டு திருக்கல்யாண நிகழ்ச்சியும், சுவாமி வீதியுலாவும் நடைபெற்றது. 
முன்னதாக வள்ளி தெய்வானையுடன் கூடிய முருகப் பெருமானுக்கு பால்,தயிர், தேன், பழம், பன்னீர், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட பொருள்களால் அபிஷேகம் நடத்தப்பட்டது. பின்னர் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட வள்ளி,
தெய்வானையுடன் கூடிய முருகப்பெருமான் பக்தர்களுக்கு காட்சிதந்தார். இதேபோல் திருமழபாடி, கீழப்பழுவூர், பொன்பரப்பி, ஆண்டிமடம்,ஜயங்கொண்டம், மீன் சுருட்டி, தா.பழூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள சிவன் கோயில் சன்னதியில் உள்ள முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
தேரோட்டம் : பங்குனி உத்திரத்தை முன்னிட்டு அரியலூர் மாவட்டம் வி.கைகாட்டி அருகே காஞ்சிலிகொட்டாய் கிராமத்திலுள்ள முருகன் கோயிலில் தேரோட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
முன்னதாக வள்ளி, தெய்வானை மற்றும் முருகன் சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றது. தொடர்ந்து, சுவாமிகள் தேரில் எழுந்தருளினர். பின்னர், பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்துச்சென்றனர். 
தேர் கிராமத்தின் முக்கிய வீதிகளின் வழியே சென்று மாலை நிலையை அடைந்தது. தேரோட்டத்தை தொடர்ந்து பக்தர்கள் முருகனுக்கு பால்குடம் எடுத்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com