கரூர்

கிராமிய அஞ்சல் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

DIN

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கரூரில் கிராமிய அஞ்சல் ஊழியர்கள் திங்கள்கிழமை மெழுகுவர்த்தி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கரூர் ஜவஹர் பஜாரில் உள்ள தலைமை தபால் நிலையம் முன் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு கோட்ட செயலாளர் சி. கருணாநிதி தலைமை வகித்தார். பொருளாளர் எம். பழனிசாமி முன்னிலை வகித்தார். இதில், துணை தலைவர் முருகேசன், துணை செயலாளர் சாமுவேல் உள்ளிட்ட கிராமிய அஞ்சல் ஊழியர்கள் திரளாகப் பங்கேற்றனர். 
ஆர்ப்பாட்டத்தின்போது, அனைவரும் மெழுகுவர்த்தி ஏந்தி, 1.1.2016 முதல் அனைத்து பயன்களையும், புதிய சம்பளத்தையும் வழங்க வேண்டும், 65 வயதில் ஓய்வுபெறும்போது மாதத்தின் கடைசி நாளில் இலாகா ஊழியர்கள் போல ஓய்வுபெற அனுமதிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிஎஸ்கே - குஜராத், ஆடுகளத்துக்கு அப்பால்...

தேர்தல் பிரசாரத்தில் கமல்!

படே மியன் சோட்டே மியன் டிரெயிலர் வெளியீட்டு விழா - புகைப்படங்கள்

ரியான் பராக் அதிரடி: தில்லிக்கு 186 ரன்கள் இலக்கு!

மதுபான விடுதி: மேற்கூரை இடிந்து 3 பேர் பலி!

SCROLL FOR NEXT