டிஎன்பிஎஸ்சி குரூப்-2 தேர்வு: 5,965 பேர் எழுதினர்

கரூர் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற டிஎன்பிஎஸ்சி குரூப்-2 தேர்வில் விண்ணப்பித்த 8,100 பேரில் 5,965 பேர் தேர்வு எழுதினர். 2,135 பேர் தேர்வு எழுத வரவில்லை.

கரூர் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற டிஎன்பிஎஸ்சி குரூப்-2 தேர்வில் விண்ணப்பித்த 8,100 பேரில் 5,965 பேர் தேர்வு எழுதினர். 2,135 பேர் தேர்வு எழுத வரவில்லை.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் சார்பில் நடத்தப்படும் தொகுதி -2 தேர்வுகள் கரூர் மாவட்டத்தில் மொத்தம் 27 தேர்வு மையங்களில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் கரூர் தாந்தோணி அரசு கலைக்கல்லூரி, காந்திகிராமம் புனித தெரசா பெண்கள் மேல்நிலைப்பள்ளி ஆகிய மையங்களில் நடைபெற்ற தேர்வை மாவட்ட வருவாய் அலுவலர் ச.சூர்யபிரகாஷ்  பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
ஆய்வின்போது மாவட்ட வருவாய் அலுவலர் கூறியது: 
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் பல்வேறு பணியிடங்களுக்கான தொகுதி-2 தேர்வு ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது. இப்போட்டித் தேர்வுக்காக கரூர் மாவட்டத்தில் 8,100 நபர்கள் தேர்வு எழுத விண்ணப்பித்திருந்தனர்.    இவர்களுக்காக 27 தேர்வு மையங்கள் அமைத்து தேர்வு நடைபெற்றது. இத்தேர்வு பணியில் 27 முதன்மைக் கண்காணிப்பாளர்கள், 1 குழுவிற்கு 5 பேர் வீதம் 5 குழுக்கள் கொண்ட நடமாடும் கண்காணிப்பாளர்கள், 27 அறை கண்காணிப்பாளர்கள் மற்றும் 5 பறக்கும் படை அலுவலர் நியமிக்கப்பட்டுள்ளனர்.  
தேர்வு எழுதுவோர் தேர்வு மையங்களுக்கு உரிய நேரத்தில் சென்றடைய கரூர் பேருந்து நிலையத்தில் இருந்து சிறப்பு பேருந்துகள் வசதியும், தேர்வு மையங்களில் பிரத்யேகமாக பேருந்துகளை நிறுத்திச்செல்லவும் வசதிகள் ஏற்படுத்தப்பட்டிருந்தன. மாற்றுத்திறனாளிகள் தேர்வு எழுத ஏதுவாக தேர்வு கூடங்களில் தரைதளத்தில் இட ஒதுக்கீடும் செய்யப்பட்டிருந்தன.  இத்தேர்வுக்காக விண்ணப்பித்தவர்களில் 2,135 நபர்கள் தேர்வு எழுத வரவில்லை என்றார்.  
ஆய்வின் போது, கரூர் வருவாய் கோட்டாட்சியர் கு.சரவணமூர்த்தி, வட்டாட்சியர் ஈஸ்வரன், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய பிரிவு அலுவலர் செந்தில்குமார் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com