கரூர்

திருச்சியில் ராணுவத்துக்கான ஆள்சேர்ப்பு முகாம் தொடக்கம்

DIN


திருச்சி காஜாமலை ராணுவப் பயிற்சி மைய வளாகத்தில் ராணுவத்துக்கான ஆள்சேர்ப்பு முகாம் திங்கள்கிழமை தொடங்கியது. முதல் நாளில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 7000 பேர் பங்கேற்றனர்.
117 பிரதேச ராணுவப் படையில் காலியாக உள்ள ராணுவ வீரர்- பொதுப்பணியில் 57 இடங்களும், கிளார்க் மற்றும் சலவைத் தொழிலாளி பணியிடங்களில் தலா ஒரு இடங்களும் என மொத்தமாக 59 இடங்களை நிரப்புவதற்கான ஆள்சேர்ப்பு முகாம் நவம்பர் 12 ஆம் தேதி முதல் 17 ஆம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
18 முதல் 42 வயதுக்குள்பட்ட, 160 செ.மீ. உயரம் உடையவர்கள் இந்த முகாமில் பங்கேற்க தகுதிஉடையவர்கள் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது.
முதல்நாளான திங்கள்கிழமை தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் மட்டும் பங்கேற்கலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த முகாமில் பங்கேற்க ஞாயிற்றுக்கிழமை இரவு முதல் முகாம் நடைபெறும் பகுதியில் மாநிலத்தின் பல்வேறு பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் குவியத் தொடங்கினர்.
இதைத் தொடர்ந்து ஆள்சேர்ப்பு முகாமை நடத்தும் ராணுவ அதிகாரிகள், திங்கள்கிழமை காலை 5 மணிக்கு அப்பகுதிக்கு வந்து, முகாமில் பங்கேற்க வந்த இளைஞர்கள் நிர்ணயிக்கப்பட்டிருந்த உயர அளவில் இருக்கிறார்களா என்பதை சரிபார்த்த பின்னர், அவர்களின் சான்றிதழ்கள் சரிபார்க்கப்பட்டன.
இதன் பின்னர் 400 மீட்டர் வீதம் 4 முறை மைதானத்தைச் சுற்றிவர இளைஞர்கள் அனுமதிக்கப்பட்டனர். ஐந்தரை நிமிஷங்களுக்குள் மைதானத்தைச் சுற்றி வந்தவர்களில் தேர்வு செய்யப்பட்டவர்கள், அடுத்த நிலை தேர்வான கம்பியின் மேல் 10 முறை தொங்கும் பயிற்சியான புள்ளப்ஸ்ஸில் பங்கேற்க அனுமதிக்கப்பட்டனர். இதைத் தொடர்ந்து நீளம் தாண்டும் தேர்வில் பங்கேற்றனர். முன்னாள் படைவீரர்களின் வாரிசுகள், தேசிய அளவிலான விளையாட்டுகளில் சிறப்பு பெற்ற வீரர்களுக்கு இந்த தேர்வில் சலுகைகள் வழங்கப்பட்டன.
முதல் நாளான திங்கள்கிழமை மட்டும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 6000 முதல் 7000 இளைஞர்கள் பங்கேற்றதாக கூறப்படுகிறது.
செவ்வாய்க்கிழமை கர்நாடகம்,கேரளம், குஜராத், ராஜஸ்தான் போன்ற இதர மாநிலங்களைச் சேர்ந்தவர்களுக்கும் தேர்வு நடைபெறுகிறது. நவம்பர் 15,16 தேதிகளில் மருத்துவப் பரிசோதனைகள் மற்றும் இதரத் தேர்வுகள் நடைபெறும்.
ஆள் சேர்ப்பு முகாமில் தேர்வு செய்யப்பட்டோர் குறித்த பட்டியல் விவரம் நவம்பர் 17 ஆம் தேதி மாலை வெளியிடப்படும் என்று 117 ஆவது பிரதேச ராணுவப்படையின் ஆள்சேர்ப்பு அலுவலக அதிகாரிகள் தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்காளா்களுக்கு தோ்தல் அழைப்பிதழ் வழங்கி விழிப்புணா்வு

நெல்லுக்கடை ஸ்ரீமாரியம்மன் கோயில்: ஏப்.4-இல் கும்பாபிஷேகம்

கள்ளழகா் மீது தண்ணீா் தெளிக்கும் விவகாரம்: காவல் ஆணையா், எஸ்.பி. எதிா்மனுதாரராக சோ்ப்பு

சிதம்பரம் தொகுதியில் 14 வேட்புமனுக்கள் ஏற்பு

நிதி நிறுவன உரிமையாளா் வீட்டில் வருமான வரித் துறையினா் சோதனை

SCROLL FOR NEXT