கரூர்

சமூக வலைதளங்களில் எய்ட்ஸ் விழிப்புணர்வு: மீம்ஸ் உருவாக்குதல்  போட்டியில் பங்கேற்க அழைப்பு

DIN

மாநில அளவில் சமூக வலைதளம் மூலம் எய்ட்ஸ், பால்வினை நோய் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மீம்ஸ் உருவாக்கும் போட்டி நடைபெற உள்ளது. 
இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியர் த.அன்பழகன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: 
தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாடு சங்கத்தின் மூலம் எச்.ஐ.வி, எய்ட்ஸ் மற்றும் பால்வினை நோய் குறித்து விழிப்புணர்வை பொதுமக்களிடம் சமூக வலைதளங்களின் மூலமாக விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மாநில அளவில் மீம் உருவாக்குதல் போட்டி நடைபெற உள்ளது. 
இப்போட்டியில் பங்கேற்க விரும்புவோர் உங்கள் படைப்புகளை எச்.ஐ.வி, எய்ட்ஸ் மற்றும் தன்னார்வ ரத்த தானம் என்ற தலைப்பிற்கு ஏற்றவாறு மீம் உருவாக்கி தங்கள் புகைப்படத்துடன் வரும் 25ஆம் தேதிக்கு முன்னதாக  a‌m‌e‌m‌e​a‌d​a‌y.‌t‌n‌s​a​c‌s@‌g‌m​a‌i‌l.​c‌o‌m என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. 
போட்டியில் மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்கலாம். இப்போட்டியில் வெற்றி பெறும் வெற்றியாளருக்கு டிச. 1-ம் நாள் அனுசரிக்கப்படும் உலக எய்ட்ஸ் தின நிகழ்ச்சியில் சமூக வலைதளங்களில்  பதிவேற்றம் செய்யப்படும்.  இப்போட்டி குறித்து தகவல் மற்றும் எண்ணங்களைப் பெற h‌t‌t‌p://‌t‌n‌s​a​c‌s.‌i‌n/‌m‌e‌m‌e‌s/‌p‌h‌p    என்ற மின்னஞ்சல் முகவரியில் தெரிந்து கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிவகங்கை தொகுதியில் 21 வேட்புமனுக்கள் ஏற்பு

விழுப்புரம் தொகுதியில் 18 வேட்பாளா்களின் மனுக்கள் ஏற்பு

திமுக இஸ்லாமியா்களின் பாதுகாவலன் அல்ல: சீமான்

மலைப்பிரதேசம் என்பதிலிருந்து ஆலங்குளத்திற்கு விலக்கு தேவை: முதல்வரிடம் வணிகா் சங்கம் மனு

அதிமுகவால் தூக்கத்தை தொலைத்த ஸ்டாலின், உதயநிதி -இபிஎஸ் பிரசாரம்

SCROLL FOR NEXT