"ஒழுக்கத்தோடு, வேலையையும் அளிப்பதே நல்ல கல்வி'

ஒழுக்கத்தோடு, வேலைவாய்ப்பையும் அளிப்பதே சிறந்த கல்வி என்றார் திருக்குறள் பேரவை நிறுவனர் மேலை. பழனியப்பன். 

ஒழுக்கத்தோடு, வேலைவாய்ப்பையும் அளிப்பதே சிறந்த கல்வி என்றார் திருக்குறள் பேரவை நிறுவனர் மேலை. பழனியப்பன். 
கரூர் அடுத்த என்.புதூர் அரசு உயர்நிலைப் பள்ளியில்  பள்ளித் தலைமை ஆசிரியர் இரா. வள்ளிராசன் தலைமையில்  புதன்கிழமை நடந்த குழந்தைகள் தின விழாவில்  இதில் சிறப்பு விருந்தினராக பங்கேற்று, பள்ளி மாணவ, மாணவிகளுக்கு திருக்குறள் நூல்கள் மற்றும் பேனாக்கள் வழங்கி மேலும் அவர் பேசியது: பாடம் செய்து தேர்வெழுதி பட்டம் பெறும் கல்வி சிறந்த கல்வியாகாது.  ஒழுக்கம், பண்பாடு, பெரியோரை மதித்தல், இவற்றோடு தொழில் சார்ந்த கல்வியையும் கற்று எதிர்கால போட்டி நிறைந்த உலகில் வேலைவாய்ப்பை பெறும் வகையில் பெறும் கல்வி மட்டுமே சிறந்ததாக அமையும். எந்தப் பணியையும் உயர்வு தாழ்வு எண்ணாமல் செய்யக் கற்றுக் கொள்ள வேண்டும். ஆண்டிற்கு 10 லட்சம் பேர் உயர் கல்வி முடித்து வருகிறார்கள். ஆனால், திறமையானவர்கள் மட்டுமே  வேலைவாய்ப்பு பெற முடியும்.  எதிர்காலம் ஒவ்வொரு மாணவருக்கும் சிறப்பாக அமைய வெறும் ஏட்டுக்கல்வியோடு இல்லாமல் தொழில்சார்ந்த கல்வியையும் கற்றுக்கொள்ள வேண்டும் என்றார். முன்னதாக பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டன.
நிகழ்ச்சியில் கரூர் பேனா நண்பர் பேரவை திருமூர்த்தி, ராஜா கலந்து கொண்டு கடிதம் எழுதும் பழக்கத்தை வலியுறுத்தி மாணவர்களுக்கு அஞ்சல் அட்டைகள் வழங்கினர். நிகழ்ச்சியில் மாணவ, மாணவிகள் ஆசிரியர்கள் திரளாக பங்கேற்றனர்.  தமிழாசிரியை கே.சி. சாந்தி வரவேற்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com