கோயில்களில் முருகப் பெருமானுக்கு திருக்கல்யாணம்

கரூர் பசுபதீஸ்வரர் கோயில் மற்றும் வெண்ணைமலை முருகன் கோயில்களில்  முருகப்பெருமானுக்கு புதன்கிழமை 

கரூர் பசுபதீஸ்வரர் கோயில் மற்றும் வெண்ணைமலை முருகன் கோயில்களில்  முருகப்பெருமானுக்கு புதன்கிழமை நடைபெற்ற திருக்கல்யாணத்தில் பக்தர்கள் திரளாகப் பங்கேற்றனர்.
முருகப்பெருமான் வள்ளி, தெய்வானையுடன் வீற்றிருக்கும் கோயில்களில் கந்தசஷ்டி விழா கடந்த 8-ம் தேதி யாகசாலை பூஜையுடன் தொடங்கியது. தொடர்ந்து நாள்தோறும் அதிகாலையில் கோயில் நடை திறக்கப்பட்டு சிறப்பு அபிஷேகம், சிறப்பு தீபாராதனை நடைபெற்று வந்தது. 
கந்த சஷ்டி விழாவின் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான சூரசம்ஹார நிகழ்ச்சி கரூர் மாவட்டத்தில் கரூர் பசுபதீஸ்வரர் கோயில், புகழிமலை வேலாயுதசுவாமி கோயில், பாலமலை முருகன் கோயில், வெண்ணைமலை முருகன் கோயில் உள்ளிட்ட  முருகன் வீற்றிருக்கும் கோயில்களில் செவ்வாய்க்கிழமை மாலை நடைபெற்றது. இதையடுத்து புதன்கிழமை முருகப்பெருமானுக்கு வள்ளி, தெய்வானை சுவாமிகளுடன் திருக்கல்யாணம் நடைபெற்றது. முன்னதாக முருகன், வள்ளி, தெய்வானக்கு சிறப்பு அலங்காரம், தீபாராதனை காண்பிக்கப்பட்டு திருமாங்கல்யம் அணிவிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.  இபக்தர்கள் திரளாக பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com