மாற்றுத்திறனாளிகளுக்கான விழிப்புணர்வு வார விழா ஆலோசனை

மாற்றுத்திறனாளிகளுக்கான விழிப்புணர்வு வார விழா கரூர் மாவட்டத்தில் சிறப்பாகக் கொண்டாடப்பட உள்ளது என்றார்  மாவட்ட  ஆட்சியர் த. அன்பழகன். 

மாற்றுத்திறனாளிகளுக்கான விழிப்புணர்வு வார விழா கரூர் மாவட்டத்தில் சிறப்பாகக் கொண்டாடப்பட உள்ளது என்றார்  மாவட்ட  ஆட்சியர் த. அன்பழகன். 
மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் நடைபெறவுள்ள மாற்றுத்திறனாளிகளுக்கான விழிப்புணர்வு வார விழா நிகழ்ச்சிகள் குறித்து மேற்கொள்ளப்படவேண்டிய முன்னேற்பாடுகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சியரகத்தில் புதன்கிழமை நடைபெற்றது. 
கூட்டத்திற்கு தலைமை வகித்து மாவட்ட ஆட்சியர் த. அன்பழகன் பேசியது:
வரும் 26-ம் தேதி தொடங்கி டிச.3 வரை நடைபெறவுள்ள விழாவில் அனைத்துவகை மாற்றுத்திறனாளிகளும் பயன்பெறும் வகையில் நிகழ்ச்சி நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.
26-ம் தேதி அன்று அனைத்து சிறப்பு பள்ளி மாற்றுத்திறனாளி மாணவ, மாணவிகளின் அணிவகுப்பும், ஆட்சியரகத்தில் மரக்கன்று நடும் நிகழ்ச்சியும் நடைபெறும். மேலும், மாற்றுத்திறனாளிகளுக்கான சட்டங்களும், திட்டங்களும், குறித்து பொம்மலாட்டத்துடன் கூடிய இசை நிகழ்ச்சியும் நடைபெறவுள்ளது. வரும்  27-ம் தேதி மணவாடி, புனித அந்தோனியர் 
சிறப்பு பள்ளியில் 12 வயதுக்கு மேல் உள்ள மன வளர்ச்சி குன்றிய, காது கேளாத, வாய் பேசாத மற்றும் பார்வையற்ற மாற்றுத்திறனாளி குழந்தைகளின் நாடகம், பாட்டு, நடனம் உள்ளிட்ட கலை இலக்கிய நிகழ்ச்சி,  28-ம் தேதி அன்பாலயம் சிறப்பு பள்ளியில் 12 வயதுக்கு மேல் உள்ள மன வளர்ச்சி குன்றிய, காது கேளாத, வாய் பேசாத, பார்வையற்ற மற்றும் கை, கால் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு படம் வரைதல், களிமண் உருவங்கள், கைவினை பொருட்கள், திருக்குறள் ஒப்பித்தல் ஆகிய திறன் தேர்வுகள் நடத்தப்படும். 29-ம் தேதி மாவட்ட விளையாட்டரங்கத்தில் 12 வயதுக்கு மேல் உள்ள மன வளர்ச்சி குன்றிய, காது கேளாத, வாய் பேசாத, பார்வையற்ற மற்றும் கை, கால் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளி குழந்தைகளின் பொருட்கள் அடையாளம் காணல் உள்ளிட்ட விளையாட்டுத் திறன் வெளிப்பாடு நிகழ்ச்சிகள்  நடைபெறவுள்ளன.  
ஆட்சியரகத்தில் 30-ம் தேதி மாற்றுத்திறனாளிகளுக்கான மருத்துவ முகாமும்,  டிச. 1-ல் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு வங்கிக் கடன் மற்றும் வேலைவாய்ப்பு மேளா,  2-ம் தேதி கல்லூரி மாணவ, மாணவிகளுக்கிடையே மாற்றுத்திறனாளிகளுக்கான புதிய அறிவியல் கண்டுபிடிப்புகளில் முதல் 3 இடங்களை பிடித்த மாணவ, மாணவிகளுக்கு வெள்ளி பதக்கங்கள் வழங்கப்படவுள்ளன. 
3-ம் தேதி அனைத்து நாடுகள் மாற்றுத்திறனாளிகள் தினம் மக்களவை துணைத் தலைவர், அமைச்சர் பங்கேற்று மாபெரும் நலத்திட்ட உதவி வழங்கும் விழா நடத்த திட்டமிடப்பட்டுள்ளது என்றார்.
கூட்டத்தில், மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் ஜான்சி, மாவட்ட விளையாட்டு அலுவலர் சாந்தி  உள்ளிட்ட பல்வேறு துறை அலுவலர்கள் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com