மாநில உரிமைகளை பறிப்பதால் இந்தியாவின் வளர்ச்சி பாதிப்பு

மாநில உரிமைகள் பறிக்கப்படுவதால் இந்தியாவின் வளர்ச்சி பாதிக்கப்படுகிறது என்றார் மக்களவைத் துணைத் தலைவர் மு. தம்பிதுரை.

மாநில உரிமைகள் பறிக்கப்படுவதால் இந்தியாவின் வளர்ச்சி பாதிக்கப்படுகிறது என்றார் மக்களவைத் துணைத் தலைவர் மு. தம்பிதுரை.
இதுகுறித்து வெள்ளிக்கிழமை அவர் மேலும் கூறியது:
இந்தியா முன்னேற மாநிலங்களுக்குரிய அதிகாரத்தை மத்திய அரசு முழுமையாக வழங்க வேண்டும். அப்போதுதான் இந்தியா வலிமை மிக்க நாடாகும். மறைந்த பிரதமர் இந்திராகாந்தி காலத்தில் கல்வித் துறையானது பொதுப்பட்டியலுக்கு கொண்டு செல்லப்பட்டதால் இன்று பல்வேறு இன்னல்களைச் சந்திக்கிறோம். 
நீட் தேர்வு போன்றவற்றை தமிழக மக்கள் மற்றும் அரசு எதிர்க்கும்போது  மத்திய அரசு அத்தேர்வைத் திணிப்பதால் நமது உரிமை பறிபோகிறது. 
இந்தியை  வளர்க்க,  இந்திய ஒருமைப்பாடு என கூறிக்கொண்டு திட்டங்களை மத்திய அரசு கொண்டு வருவது வருத்தம் தரக்கூடியது. அந்தந்த மாநிலங்களில் மத்திய அரசு சார்பில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் இந்தியில் உள்ளதால் பொதுமக்களுக்கு புரியாத நிலை ஏற்படுகிறது. இந்திய ஒருமைப்பாடு என்ற பெயரில் காங்கிரஸானாலும், பாஜகாவாலும்  மாநில உரிமைகளை பறிப்பது இந்தியாவின் வளர்ச்சியைப் பாதிக்கிறது. தொழில்துறையில் மேட் இன் இந்தியா, மேக்இன் இந்தியா எனக் குறிப்பிட்டுள்ளனர். 
ஆனால் பை இன் இந்தியா என எப்போதாவது கூறியிருக்கிறார்களா,   நமது சந்தையை சீனா போன்ற நாடுகள் 
ஆக்கிரமித்துக் கொண்டிருக்கின்றன. 
உற்பத்திப்  பொருட்களை வெளிநாடுகளில் சந்தைப்படுத்த வேண்டும். நம் நாட்டில் தொழிற்சாலைகளை அதிகளவில் உருவாக்க வேண்டும். மத்திய அரசு இதுபோன்று செயல்களில் கவனம் செலுத்த வேண்டும் என்றார்.
பேட்டியின்போது கல்வித் துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன், போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர், ஆட்சியர் த. அன்பழகன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com