ரசாயன பூச்சி, நோய்க்கான மருந்துகளைக் கையாளப் பயிற்சி

அரியலூர் மாவட்டம், புங்கங்குழி அருகேயுள்ள ஆதனூர் கிராமத்தில் அட்மா திட்டத்தின் கீழ் ரசாயன பூச்சி

அரியலூர் மாவட்டம், புங்கங்குழி அருகேயுள்ள ஆதனூர் கிராமத்தில் அட்மா திட்டத்தின் கீழ் ரசாயன பூச்சி மற்றும் நோய்க்கான மருந்துகளை கையாளும் முறைகள் குறித்த பயிற்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
அரியலூர் வேளாண் உதவி இயக்குநர் க. பூவலிங்கம் தலைமை வகித்து, ரசாயன பூச்சி மற்றும் பூஞ்சான கொல்லி மருந்துகளைப் பயன்படுத்தும்போது விவசாயிகள் தங்கள்  கைகளில் கையுறைகளை அணிந்து கொள்ள வேண்டும். பூச்சி மற்றும் நோய் மருந்துகளை தெளிக்க  உள்ள பிரத்யோக தெளிப்பான நாசில்களை பயன்படுத்த வேண்டும். நாம்  பயன்படுத்தும் பூச்சி மற்றம் பூஞ்சாண மருந்துகள் குறைந்த விஷத்தன்மை உடைய மனிதர்களுக்கு தீங்கு விளைவிக்காத  மருந்துகளாக இருக்க வேண்டும். இயன்ற வரை வேப்பம்கொட்டைச் சாறு,வேப்பம்  எண்ணெய்,வேம்பு புண்ணாக்கை பூச்சி மற்றும் நோய் கட்டுப்பாட்டுக்குப் பயன்படுத்தலாம் என்றார் அவர். அட்மா திட்ட வட்டாரத் தொழில்நுட்ப மேலாளர் ந. பழனிசாமி பேசுகையில், இனக்கவர்ச்சி பொறி,சோலார் விளக்கு பொறிகொண்டு பூச்சிகளை கட்டுப்படுத்தி இயற்கையை பாதுகாக்க வேண்டும். வரப்பு பயிர்களான ஆமணக்கு, துவரை போன்றவற்றை வயல்களில் வளர்க்கும்போது  பூச்சிகளின் தாக்குதல் பயிரில் குறைவாகவே தென்படும் என்றார் அவர்.தொடர்ந்து இந்த பயிற்சியில் அதே பகுதி சு. முருகேன் என்பவருடைய பருத்தி வயலுக்கு விவசாயிகள் அழைத்துச் செல்லப்பட்டு அங்கு வயலில் தென்பட்ட பூச்சிகளை மருந்து தெளிப்பான் மூலம் கட்டுப்படுத்துவது குறித்து விளக்கினர்.
ஏற்பாடுகளை அட்மா திட்ட உதவி தொழில்நுட்ப மேலாளர்கள் ரா.இரா. வாசுதி,செ. சுந்தரமூர்த்தி, எஸ். தமிழ்செல்வன் மற்றும் உதவி வேளாண் அலுவலர்கள் செய்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com