சிறுபான்மையினர் கல்வி நிலையங்களை  மேம்படுத்த நிதியுதவி

கரூர் மாவட்டத்தில் சிறுபான்மையினர் கல்வி நிலையங்களை மேம்படுத்த நிதியுதவி வழங்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் த. அன்பழகன்தெரிவித்துள்ளார்.

கரூர் மாவட்டத்தில் சிறுபான்மையினர் கல்வி நிலையங்களை மேம்படுத்த நிதியுதவி வழங்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் த. அன்பழகன்தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து திங்கள்கிழமை அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு : சிறுபான்மையினர் கல்வி நிலையங்களில் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த மத்திய அரசால் வழங்கப்படும் நிதியைப் பெற,  கல்வியில் பின் தங்கிய சிறுபான்மையின மாணவ, மாணவிகளின் கல்வித்தரத்தை மேம்படுத்தும் வகையில் செயல்படும் சிறுபான்மையினர் கல்வி நிறுவனங்களில் அடிப்படை உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகம் சிறப்புத் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. 
இத்திட்டத்தின் கீழ், கல்வி நிலையங்களில்உள்ள வகுப்பறை, அறிவியல் கூடம், கணினி அறை, நூலகம், கழிப்பறை, குடிநீர் வசதி, விடுதிகள் மற்றும் இதர அத்தியாவசிய தேவைகளை மேம்படுத்த  நிதியுதவி வழங்கப்படுகிறது. இதற்கான திட்ட மதிப்பீட்டுத் தொகையில் 75 % (அல்லது) அதிகபட்சம் ரூ.50 லட்சம் இதில் எது குறைவோ அந்தத் தொகை சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனத்திற்கும் வழங்கப்படும். இந்த நிதியைப் பெறுவதற்கு அரசு உதவிபெறும், உதவி பெறாத சிறுபான்மையின கல்வி நிறுவனங்களாக இருத்தல் வேண்டும். தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள், காப்பகங்கள் நடத்தும் கல்வி நிறுவனமாக இருத்தல் வேண்டும். தனிப்பட்ட நபருக்குரியதாக இல்லாதிருத்தல் மற்றும் சாதி, அரசியல் சாராமல் இருத்தல் வேண்டும். அரசு உதவிபெறும், உதவி பெறாத சிறுபான்மையினரின் பள்ளிகள் குறைந்தபட்சம் 3 ஆண்டுகள் இயங்கி மாணவர்கள் சேர்க்கை தொடர்ந்து நடைபெற்றிருக்க வேண்டும். மாணவர்களிடமிருந்து அதிகமாக கல்விக்கட்டணம் வசூலிக்கக்கூடாது.
மக்கள் தொகை கணக்கெடுப்பின் கீழ் 20 சதவீதம் சிறுபான்மையினர் மக்கள் வசிக்கும் வட்டம், நகரம், கிராமத்தைச் சேர்ந்த கல்வி நிறுவனங்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். மேலும் இது தொடர்பான விவரங்களை w‌w‌w.‌m‌h‌r‌d.‌g‌o‌v.‌i‌n  என்ற இணையதள முகவரி மூலம் தெரிந்துகொள்ளலாம். மேலும், சம்பந்தப்பட்ட தகுதிவாய்ந்த கல்வி நிறுவனங்கள் உரிய கருத்துருவை தயார் செய்து அதை மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகம் மூலம் அனுப்ப வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com