கரூர்

தேனி, திண்டுக்கல், திருச்சி மாவட்டங்களிலும் டயாலிசிஸ் மையங்கள் அமைக்கப்படும்

DIN

கரூரைப் போன்று தேனி, திண்டுக்கல், திருச்சி மாவட்டங்களிலும் கரூர் வைஸ்யா வங்கி மற்றும் ரோட்டரி பவுண்டேசன் சார்பில் குறைந்த கட்டணத்தில் செயல்படும் டயாலிசிஸ் மையங்கள் அமைக்கப்படும் எனறார் இந்த வங்கியின் நிர்வாக இயக்குநர் மற்றும் முதன்மை செயல் அதிகாரி பி.ஆர். சேஷாத்ரி.
கரூர் வைஸ்யா வங்கி, ரோட்டரி பவுண்டேசன் சார்பில் கரூர் தெற்கு நரமசிம்மபுரம் அபிராமி மகப்பேறு மையத்தில் அமைக்கப்பட்டுள்ள டயாலிசிஸ் மையத்தை திங்கள்கிழமை தொடக்கி வைத்து, மேலும் அவர் பேசியது:
 சிறுநீரகப்  பாதிப்புக்குள்ளான லட்சக்கணக்கான மக்களின் ஒரே நம்பிக்கை டயாலிசிஸ் மட்டுமே. தனியார் மருத்துவமனைகளில் இதற்கான சிகிச்சைக் கட்டணம் என்பது சாதாரண மக்களால் செலுத்த இயலாத ஒன்று. அரசு மருத்துவமனைகளில் இந்த டயாலிசிஸ் சிகிச்சை குறைந்த செலவில் கிடைக்கும் என்றாலும், சிறுநீரக பாதிப்புக்குள்ளான அனைவருக்கும் சிகிச்சை கிடைப்பதில்லை. இந்த குறையை போக்குவதற்காகத்தான்  ரோட்டரி மாவட்டம் 3000 குறைந்த கட்டணத்தில் டயாலிசிஸ் மையங்களை அமைப்பதோடு அதனை பராமரிக்கும் பொறுப்பையும் ஏற்றுள்ளது.
கரூர் வைஸ்யா வங்கி தனது சமூக பொறுப்பின் மூலம் இரண்டு குறைந்த கட்டண டயாலிசிஸ் மையங்களை அமைக்க ரூ.1.20 கோடியை நன்கொடையாக வழங்கியுள்ளது.  
இந்த நிதியுதவியோடு பலர் வழங்கிய நன்கொடை மூலம் ரோட்டரி மாவட்டம் 3000-த்துக்குள்பட்ட திருச்சி, திண்டுக்கல், தேனி மாவட்டங்களிலும்டயாலிசிஸ் மையங்கள் அமைக்கப்பட உள்ளன என்றார் சேஷாத்ரி. இந்த நிகழ்வுக்கு ரோட்டரி மாவட்ட ஆளுநர் கண்ணன் தலைமை வகித்தார். முன்னாள் ஆளுநர் கோபாலகிருஷ்ணன், பன்னாட்டு ரோட்டரி இயக்குநர் விஎன்சி. பாஸ்கர், மாவட்ட சுகாதாரப்பணிகள் இணை இயக்குநர் மருத்துவர் விஜயகுமார் ஆகியோர் வாழ்த்திப்பேசினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆலங்குளம் அருகே விபத்தில் காயமடைந்தவா் உயிரிழப்பு

கடையநல்லூரில் துணை ராணுவப் படை அணிவகுப்பு

ஊதிய உயா்வு ஒப்பந்த அமல் கோரி விசைத்தறியாளா்கள் வேலைநிறுத்தம்

ஆலங்குளம் அரசு மகளிா் கலைக் கல்லூரியில் வாக்காளா் விழிப்புணா்வு நிகழ்ச்சி

கிராமப்புற கண்டுபிடிப்புகளை மேம்படுத்த புரிந்துணா்வு ஒப்பந்தம்

SCROLL FOR NEXT