புதன்கிழமை 14 நவம்பர் 2018

அதிகாரியை தாக்கி செயின் பறிப்பு

DIN | Published: 11th September 2018 08:45 AM

கரூரில் பெட்ரோல் சேமிப்பு கிடங்கு அதிகாரியை தாக்கி இரண்டரை பவுன் தங்கச் செயின், மடிக்கணினி பறிக்கப்பட்டது. 
வெண்ணைமலையைச் சேர்ந்தவர் மனோகரன்)51), கரூர் ஆத்தூரில் உள்ள பெட்ரோல் சேமிப்புக் கிடங்கில் முதன்மை அலுவலராக பணியாற்றி வருகிறார். இவர் சனிக்கிழமை இரவு பணி முடிந்து காரில் பெரிச்சிபாளையம் பகுதியில் சென்றார். இவரது காரை நிறுத்திய மர்ம நபர்கள் இருவர் கார் கண்ணாடியை உடைத்தனர். பின்னர் மனோகரன் கழுத்தில் கிடந்த இரண்டரை பவுன் செயின், மடிக்கணினி ஆகியவற்றை பறித்துக் கொண்டு தப்பினர்.  இதுகுறித்த புகாரின்பேரில் வெங்கேமேடு போலீஸார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.
 

More from the section

விதிமுறைகளை மீறிய வாகன ஓட்டிகளுக்கு ரூ.18 ஆயிரம் அபராதம்
குடிநீர் கேட்டு காலிக் குடங்களுடன் ஆட்சியரகம் வந்த கிராம மக்கள்
மாநில தடகளப் போட்டிக்கு கரூர் பள்ளி மாணவர்கள் தேர்வு
சட்ட விழிப்புணர்வு துண்டுப்பிரசுரம் விநியோகம்
க. பரமத்தியில் ரூ.3 கோடியில் திட்டப் பணிகளுக்கு பூமிபூஜை