திங்கள்கிழமை 19 நவம்பர் 2018

கரூரில் கண்தான விழிப்புணர்வுப் பேரணி

DIN | Published: 11th September 2018 08:45 AM

கரூரில் கண்தானத்தை வலியுறுத்தி நடைபெற்ற விழிப்புணர்வுப் பேரணியில் கல்லூரி மாணவ, மாணவிகள் திரளாக பங்கேற்றனர்.
கரூர் லயன்ஸ் சங்கங்கள், அரசு கலைக் கல்லூரி லியோ சங்கம் சார்பில் கண்தான விழிப்புணர்வுப் பேரணி திங்கள்கிழமை நடைபெற்றது. நாரதகான சபா முன்பு துவங்கிய பேரணியை  லயன்ஸ் சங்க மாவட்டத் தலைவர் ஏ.ஆர்.கே.சேது சுப்ரமணியன் தொடக்கி வைத்தார். வட்டாரத் தலைவர்கள் செந்தில்குமார், சண்முகம், பிளாட்டினம் கணேசன், பி. கார்த்திகேயன் , பி.என்.அனந்தநாராயணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். லயன்ஸ் சங்கங்களின் மண்டலத் தலைவர் மேலை.பழனியப்பன் கண்தானம் குறித்து பேசினார். அரசு கலைக் கல்லூரி மாணவ, மாணவியர் கண்தானத்தை வலியுறுத்தும் விழிப்புணர்வு பதாகைகளை கைகளில் ஏந்திச் சென்றனர். 
உழவர்சந்தை, லைட்ஹவுஸ் கார்னர், பழைய திண்டுக்கல் சாலை, ஜவஹர் பஜார் வழியாகச் சென்ற பேரணி நகரத்தார் மண்டபத்தை அடைந்தது. இதில், பல்வேறு லயன்ஸ் சங்க நிர்வாகிகள் பங்கேற்றனர்.  

More from the section

அமராவதியில் திடீர் வெள்ளம்; வீணாகும் நீரைச் சேமிக்க தடுப்பணை தேவை: விவசாயிகள் கோரிக்கை
உழைப்பின் களைப்பு போக்கும் அருமருந்தே நாட்டுப்புறப் பாட்டு
பணியில் இருந்த அஞ்சல் ஊழியர் மயங்கி விழுந்து சாவு
இளைஞருக்கு கத்திக்குத்து: ரயில்வே ஊழியர் உள்ளிட்ட இருவர் மீது வழக்குப் பதிவு
3 புதிய வழித்தடங்களில் பேருந்துகள் இயக்கம்