வியாழக்கிழமை 20 செப்டம்பர் 2018

கொலை முயற்சி வழக்கில் விவசாயிக்கு 7 ஆண்டு சிறை

DIN | Published: 11th September 2018 08:45 AM

கொலை முயற்சி வழக்கில் விவசாயிக்கு 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து கரூர் நீதிமன்றம் திங்கள்கிழமை தீர்ப்பளித்தது.
வெள்ளியணையை அடுத்த வீரியப்பட்டியைச் சேர்ந்த விவசாயி ராமசாமி(55).  இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த கருப்பசாமிக்கிடையே(48) காளையப்பட்டியில் உள்ள பொதுக்கிணற்றில் இருந்து விவசாய நிலத்திற்கு நீர்பாய்ச்சுவது தொடர்பாக முன்விரோதம் இருந்துள்ளது. கடந்த 2013 மார்ச் 8ஆம் தேதி விவசாய நிலத்திற்கு ராமசாமி நீர்பாய்ச்சிக்கொண்டிருந்தார். அங்கு வந்த கருப்பசாமி, அவரது மகன் ரவிசங்கர்(21) ஆகியோர் ராமசாமியிடம் தகராறு செய்து அவரை அரிவாளால் வெட்டினர். 
இதில் காயமடைந்த அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார்.
இதுதொடர்பாக ராமசாமி அளித்த புகாரின் பேரில் வெள்ளியணை போலீஸார் வழக்குப் பதிவு செய்து கருப்பசாமி, ரவிசங்கரைக் கைது செய்து மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில்  வழக்குத் தொடர்ந்தனர். வழக்கை விசாரித்த நீதிபதி, குற்றம்சாட்டப்பட்ட கருப்பசாமிக்கு 7 ஆண்டு சிறைத் தண்டனையும், ரூ.1,000 அபராதமும், கட்டத்தவறினால் மேலும் ஒரு மாத சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்தார். ரவிசங்கர் மீதான விசாரணை கரூர் சிறார் நீதிமன்றத்தில் தனியாக நடைபெற்று வருகிறது.
 

More from the section

காவிரி படுகையில் காவிரி உரிமை மீட்புக்குழுவினர் கள ஆய்வு
கூட்டணிக்காக நாங்கள் யார் கதவையும் தட்டவில்லை
சென்னையில் ஜன.21-இல் அசுவமேத யாகம் : செ.நல்லசாமி
தலைமை ஆசிரியர் அறையின் பூட்டை உடைத்து கணினி திருட்டு
செப். 25 -இல் மாற்றுத்திறனாளிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்